குவைத்தில் போதைப்பொருட்களை கடத்த முயன்ற இருவர் கைது…

Kuwait - Two detained as drug pills recovered from sea bed.(image source:MENAFN)

கடல் வழியாக நாட்டிற்குள் போதைப்பொருட்களை கடத்த முயன்ற இரண்டு பேரை குவைத் கடலோர காவல்படையினர் தடுத்துநிறுத்தியுள்ளதாக அல்-ராய் செய்தி தெரிவித்துள்ளது.

கடலோர காவல்படையினரின் கூற்றுப்படி நாட்டின் வடக்குப் பகுதியில் எந்த வெளிச்சமும் இல்லாமல் படகு ஒன்று சந்தேகத்தின் விதமாக தென்பட்டதாக தெரிவித்துள்ளனர்.

ரோந்து வீரர்கள் படகை தடுத்து இருவரையும் கைது செய்து கடல் பாதுகாப்பு நிர்வாகத்திடம் ஒப்படைத்தனர், ஏனெனில் அவர்கள் குவைத்தின் கடலுக்குள் பிடிபட்டுள்ளனர்.

விசாரணையின்போது, ​​கைது செய்யப்பட்டவர்கள் கடலின்மேற்பரப்பில் ஒரு அளவு போதைப்பொருட்களை பதுங்கிவைத்ததை ஒப்புக்கொண்டதாகக் கூறப்படுகிறது. கடலோர காவல்படையின் டைவர்ஸ்(divers) கடலின் ஆழத்திலிருந்து போதைப்பொருள் கொண்ட ஏழு சீல் பைகளை எடுத்தனர்.

கைதுசெய்யப்பட்ட நபர்களையும் மற்றும் பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருட்களையும் போதைப்பொருள் கட்டுப்பாட்டு பொதுத் துறைக்கு (GDDC) அனுப்பப்பட்டுள்ளது.

News Source : (MENAFN – Arab Times)