குவைத் உள்ளிட்ட நாடுகளில் இருந்து இந்தியாவிற்கு சுமார் 33 லட்சம் பேர் திரும்பியுள்ளனர்!

Kuwait Trichy Flights

இந்திய அரசின் வந்தே பாரத் விமானங்கள் மூலம் சுமார் 33 லட்சம் பேர் இந்திய நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

இதனை சிவில் விமானப் போக்குவரத்து துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி கூறியுள்ளார்.

வீட்டுப் பணியாளர்கள் குவைத் திரும்ப அனுமதி – தனிமைக்கான கட்டணம் அறிவிப்பு!

இதுவரை இந்த திட்டத்தின் மூலம் எட்டு கட்டமாக சுமார் 7789 விமானங்கள் இயக்கப்பட்டுள்ளன என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

COVID-19 தொற்று பரவல் காரணமாக, குவைத், சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளுக்கு சர்வதேச விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.

வெளிநாடுகளில் பணிபுரியும் இந்தியர்களை அழைத்துவர சிறப்பு விமானங்களை மத்திய அரசு வந்தே பாரத் திட்டத்தின்கீழ் அறிவித்தது.

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் வந்தே பாரத் இயக்கத்தின் கீழ், இந்த டிசம்பர் மாதத்தில் திருச்சிக்கும் குவைத், துபாய், ஷார்ஜா, சிங்கப்பூர் ஆகிய நகரங்களுக்கும் இடையே விமானங்களை இயக்கும்.

சர்வதேச பயணிகளுக்கான விதிமுறைகளின்படி, வெளிநாடுகளில் இருந்து இந்தியா வரும் பயணிகள் 7 நாட்களுக்கு நிறுவன தனிமைப்படுத்துதலில் வைக்கப்படுவார்கள்.

சோதனையில் அறிகுறிகளுக்கு ஏற்ப, அவர்கள் வீட்டுத் தனிமையிலோ அல்லது தொற்று சிகிச்சை மையங்களிலோ தங்கியிருக்க அனுமதிக்கப்படுவர்.

PCR சோதனை மூலம் தொற்று இல்லை என சான்றிதழ் பெற்றவர்கள் தனிமைப்படுத்துலில் இருந்து விலக்கு அளிக்கப்படும். மேலும், சுய தனிமை அனுமதி வழங்கப்படும்.

இந்த மாதம் குவைத்தில் இருந்து இந்தியா செல்லும் ஒரு வழி விமானங்களின் முன்பதிவு!

குவைத் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

👉Facebook

👉 Twitter