எண்ணெய் உற்பத்தியை மீண்டும் தொடங்க குவைத் முடிவு..!!

Kuwait to resume oil output from the neutral zone by March 2020. (image credit : wealth arabia)

அண்டை நாடுகளின் உற்பத்தியை நிறுத்தி நான்கு ஆண்டுகளுக்கு பிறகு சவூதிஅரேபியாவுடன் இணைந்து Wafrafield-ல் மார்ச்2020 மாதத்திற்குள் எண்ணெய் உற்பத்தியை மறுதொடக்கம் செய்ய குவைத் திட்டமிட்டுள்ளது.

சவூதிஅரேபியாவின் Chevron’s சலுகையை அங்கு புதுப்பிப்பது தொடர்பான தகராறு காரணமாக மே 2015 முதல் Wafrafield மூடப்பட்டுருந்தது.

மார்ச் 2020 மாத இறுதி வரை இயங்கும் ஒபெக்கின் உற்பத்தி ஒப்பந்தத்தின் தற்போதைய காலத்திற்குள் மீண்டும் ஒரு குறிப்பிடத்தக்க அளவு எண்ணெயை சந்தையில் சேர்க்க வாய்ப்புகள் இல்லை என்று குவைத் மற்றும் சவுதி கூறியுள்ளது.

குவைத் மற்றும் சவுதி அரேபியா இடையே 1922 ஆம் ஆண்டு ஒப்பந்தத்தால் 5,700 கி.மீ உருவாக்கப்பட்டது. 1970 களில், இரண்டு வளைகுடா அரபு அண்டை நாடுகளும் இப்பகுதியைப் பிரித்து ஒவ்வொரு பாதியையும் அந்தந்த பிரதேசத்தில் இணைத்துக்கொள்ள ஒப்புக் கொண்டது.

இப்பகுதியில் இரண்டு முக்கிய எண்ணெய் உற்பத்திசெய்யும் இடங்கள் உள்ளன : Wafra and Khafji ஆகும்.

அண்டை நாடுகளுக்கிடையில் ஏற்பட்ட இடைவெளியின் பின்னர் Khafji 2014-ல் மூடப்பட்டது. சவுதிஅரேபியா இந்த துறையின் அசல் 60 ஆண்டு சலுகையை நீட்டித்து, அமெரிக்காவை தளமாகக் கொண்ட செவ்ரான், அதன் துணை நிறுவனமான சவுதிஅரேபியவின் செவ்ரான் மூலம், 2039 வரை அங்குள்ள உரிமைகளை வழங்கியபோது, Wafra​​ துறையில் கருத்து வேறுபாடு அதிகரித்தது. இது குறித்து ஒருபோதும் ஆலோசிக்காமல் இருந்து வந்தனர்.

குவைத் வளைகுடா எண்ணெய் நிறுவனத்துடன் Wafra-வை இயக்கும் செவ்ரான், 2019 டிசம்பரில், 12 மாதங்களுக்குள் அங்கு முழு உற்பத்தி மீட்கப்படும் என்று எதிர்பார்ப்பதாகக் கூறியுள்ளனர்.