குவைத்தில் கொரோனா வைரஸை நாட்டிற்குள் வராமல் தடுக்க சுகாதார மையங்கள் அமைக்க திட்டம்..!!

kuwait to open health center against corona virus. (image credit : Mbs news)

குவைத் துறைமுக ஆணையத்தின் (KPA) செய்தித் தொடர்பாளர் நாசர் அல்-சுலைமி அவர்கள் கூறுகையில் சுகாதார அமைச்சகத்தின் ஒத்துழைப்புடன் KPA இணைத்து அல்-ஷுவைக் துறைமுகம், மினா ஷூய்பா மற்றும் அல்-தோஹா துறைமுகம் ஆகிய இடங்களில் கொரோனா வைரஸை நாட்டிற்குள் வராமல் தடுக்க சுகாதார மையங்களை அமைக்கவுள்ளதாக தெரிவித்தார்.

மேலும், குவைத் சர்வதேச விமான நிலையத்தில் பொறுத்தப்பட்டுள்ளதை போன்று மூன்று வெளியேறும் இடங்களிலும் தெர்மல் கேமராக்களை பொருந்துமாறு KPA சுகாதார அமைச்சகத்திடம் கேட்டுக்கொண்டதாக தெரிவித்தார்.

குவைத் துறைமுகங்களில், குறிப்பாக டேங்கர்கள் மற்றும் கிழக்கு ஆசியாவிலிருந்து வரும் கப்பல்களுக்கு KPA முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளது என்று அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும், மூன்று சுகாதார மையங்களில் தேவையான மருந்துகள், பயிற்சி பெற்ற ஊழியர்கள் மற்றும் ஆம்புலன்ஸ் வசதியோடு இருக்கும் என்றும் தெரிவித்தார்.

Source : Arab Times