குவைத்தில் புதிய வைரஸ் வராமல் தடுக்க பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரம்..!!

Kuwait to thermal screen all passengers arriving from countries affected with coronavirus. (image source :Devdiscourse)

நாட்டின் எல்லை பகுதிகளில் தெர்மல் கேமராக்கள் பொருத்தப்பட்டு கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட பயணிகளை கண்டறியமுடியும் என்று குவைத் சுகாதார அமைச்சகம் கடந்த வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.

வைரஸைக் கையாள்வதற்கும் மற்றும் அதனை பரவாமல் தடுப்பதற்கான முறைகளனைத்தும் தயார்நிலையில் உள்ளதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும், விமான நிலையத்தின் கிளினிக்குகள் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட அறைகள் என அனைத்தும் தயார்நிலையில் உள்ளதாக அமைச்சகம் தெரிவித்தது.

 

source : Reuters