குவைத் வரும் விமானப் பயணிகளுக்கு தற்காலிக கட்டுப்பாடு..!

உலகளாவிய கொரோனா வைரஸ் தொற்றுநோயைக் கட்டுப்படுத்தும் ஒரு முயற்சியாக, நேற்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் நாட்டிற்கு வரும் விமான பயணிகளின் எண்ணிக்கையை இரண்டு வாரங்களுக்கு குறைக்க குவைத் முடிவு செய்துள்ளது.

அதாவது ஜனவரி 24 முதல் பிப்ரவரி 6 வரை, குவைத் வரும் பயணிகளின் எண்ணிக்கையை குறைக்க விமான நிறுவனங்களுக்கு சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகம் (DGCA) அறிவுறுத்தியுள்ளது.

குவைத் விமான நிலையத்தில் இயங்கும் அனைத்து விமான நிறுவனங்களுக்கும் இந்த முடிவு பொருந்தும்.

நாள் ஒன்றுக்கு 1,000 பயணிகள் மட்டும் வர முடியும் என்று DGCA விமான போக்குவரத்து தலைவர் அப்துல்லா அல் ராஜி (Abdullah Al Rajhi) கூறினார்.

மேலும், புதிய வகை கொரோனா வைரஸை கட்டுப்படுத்த அடுத்த இரண்டு வாரங்களுக்கு குவைத் சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்தியுள்ளதாக அல் அன்பா செய்தித்தாளிடம் அவர் தெரிவித்தார்.

வீட்டுப் பணிப்பெண்கள் மற்றும் குவைத் இடைவழி பயணிகளுக்கு இதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.