தென் கொரியா, தாய்லாந்து, இத்தாலி ஆகிய நாடுகளுக்கு செல்லும் அனைத்து விமானங்களையும் குவைத் நிறுத்தம்..!!

Kuwait suspends all flights to, from South Korea, Thailand, Italy.

கொரோனா வைரஸ் (COVID-19) பரவிவரும் காரணத்தால் தென் கொரியா, தாய்லாந்து மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளுக்குச் செல்லும் அனைத்து விமானங்களையும் திங்கள்கிழமை சிவில் ஏவியேஷன் இயக்குநரகம் நிறுத்தியது.

இம்மூன்று நாடுகளிலும் COVID-19 நோய்த்தொற்றுகள் பரவுவதை உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து சுகாதார அமைச்சகத்தின் பரிந்துரையின் பேரில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக DGCA தெரிவித்துள்ளது.

கடந்த இரண்டு வாரங்களாக இந்த நாடுகளுக்கு சென்ற அனைத்து வெளிநாட்டினரும் நாட்டிற்குள் நுழைய அனுமதிக்கப்பட மாட்டார்கள். மேலும், அவர்களிடம் சரியான விசாக்கள் இருந்தாலும் அனுமதிக்கப்பட மாட்டார்கள். குவைத் நாட்டை சேர்ந்தவர்களுக்கு மட்டும் சிறப்பு சுகாதார வசதிகளில் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இம்மூன்று நாடுகளிலிருந்து வருபவர்களுக்கு நுழைவு விசாக்கள் வழங்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, ஈராக்கிற்குச் செல்லும் மற்றும் புறப்படும் அனைத்து விமானங்களையும் DGCA நிறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

source : Arab Times