விசா மீறலுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை – குவைத் திட்டம்

Kuwait strict visa violators
Kuwait to launch strict campaign against visa violators (Photo: Arab Times)

குவைத்தில் விசா மீறுபவர்களுக்கான சலுகை காலம் 10 நாட்களில் முடிவடைவதால், காலக்கெடு நீட்டிக்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

காலாவதியான Residency அனுமதி வைத்திருக்கும் அனைத்து வெளிநாட்டினரும் அந்த தேதிக்கு முன்னர் அவற்றை சரிசெய்ய வேண்டும் என்று அல் கபாஸிடம் ஆதாரங்கள் தெரிவித்துள்ளது.

குவைத்தில் விசா தொடர்பான விதிமீறல்கள் 180,000-ஐ எட்டி சாதனை

சலுகை காலம் முடிந்ததும் மிகப்பெரிய பாதுகாப்பு திட்டத்தை தொடங்க குவைத் தயாராகி வருவதால், பல்வேறு பாதுகாப்புத் துறைகளுக்கு இடையே கூட்டு ஒத்துழைப்பு இருக்கும் என்று அந்த வட்டாரம் தெரிவித்துள்ளது.

காலாவதியான Residency அனுமதியுடன் குவைத்தில் தங்கியிருப்பவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்று அந்த வட்டாரம் மேலும் தெரிவிக்கிறது.

குவைத்தில் 100,000க்கும் மேற்பட்ட விசா மீறல்கள் பதிவாகியுள்ளது, ஆயினும் மார்ச் மாதத்தில் சலுகை காலம் தொடங்கியதிலிருந்து 5,000 பேர் மட்டுமே அந்த சலுகைக் காலத்தைப் பயன்படுத்தி தங்கள் நிலையைத் திருத்தியுள்ளனர்.

2020 கடைசி காலாண்டில், சுமார் 83,500 வெளிநாட்டவர்கள் குவைத்தை விட்டு வெளியேறினர்!