குவைத்தில் கொரோனா வைரஸுடன் போராடும் முன்னணி தொழிலாளர்களுக்கு 40,000 ஃபேஸ்மாஸ்க்குகளை வழங்கியுள்ளது KSE…!!

kuwait society of Engineers offers 40,000 facemasks to Covid-19 frontline workers. (photo : KUNA)

குவைத் இன்ஜினியர்ஸ் சொசைட்டியின் (KSE) தலைவர் Faisal Al-Etel கூறுகையில், சொசைட்டி கிட்டத்தட்ட 40,000 ஃபேஸ்மாஸ்க்குகளை (FaceMask) உருவாக்கியுள்ளது, இது கொரோனா வைரஸுடன் (COVID-19) போராடும் முன்னணி தொழிலாளர்களுக்கு இலவசமாக வழங்கப்படும் என்று தெரிவித்தார்.

முப்பத்தொன்பது அரசாங்க அமைப்புகள் இந்த ஃபேஸ்மாஸ்க்குகளை பெற்றுள்ளன, அவற்றை விரைவில் செயல்படும் குழுக்களுக்கு விநியோகிக்கும் என்று அவர் குவைத் செய்தி நிறுவனத்திடம் திங்களன்று (மே 4) தெரிவித்தார்.

kuwait society of Engineers offers 40,000 facemasks to Covid-19 frontline workers. (photo : KUNA)

சுகாதார மற்றும் உள்துறை அமைச்சகங்கள், தேசிய காவலர், சிவில் விமான இயக்குநரகம் (DGCA), சிறப்புப் படைகள், சுற்றுச்சூழல் பொது ஆணையம், மனிதவள பொது ஆணையம், குவைத் சுங்க பொது நிர்வாகம் மற்றும் தீயணைப்பு சேவை இயக்குநரகம் ஆகியவை இதில் அடங்கும்.

சுகாதார அமைச்சகம் மற்றும் ஆயுதப்படைகளுக்கு சொந்தமான கிட்டத்தட்ட 84 சேவை மையங்களும் இந்த ஃபேஸ்மாஸ்க்குகளை பெற்றுள்ளதாக Al-Etel அவர்கள் தெரிவித்தார்.

மேலும், எந்தவொரு அவசரநிலைகளையும் நிர்வகிப்பதற்கும், பல்வேறு அரசாங்க அமைப்புகளை ஆதரிக்கவும் 200க்கும் மேற்பட்ட ஆண் மற்றும் பெண் பொறியியலாளர்களைக் கொண்ட தன்னார்வலர்களின் குழுக்களை KSE அமைத்துள்ளது என்று AL-Etel அவர்கள் தெரிவித்துள்ளார்.