குவைத்தில் 15 சூப்பர் மார்க்கெட்டுகள் மூடல்..!!

kuwait shuts 15 supermarket for violating precautionary measures.

சுகாதார அமைச்சகம் முன்வைத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றாததற்காக 15 சூப்பர் மார்க்கெட்டுகள் மூடப்பட்டதாக வர்த்தகம் மற்றும் கைத்தொழில் அமைச்சகம் செவ்வாய்க்கிழமை (07.04.2020) தெரிவித்துள்ளது.

500 கூட்டுறவு சங்கங்கள், பல்பொருள் அங்காடிகள் மற்றும் காய்கறிக் கடைகளை கண்காணித்துவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அதன் ஆய்வுக் குழுக்கள் 2 பல்பொருள் அங்காடிகள் மற்றும் 9 கடைகளை மூடியுள்ளதாக MOCI குவைத் நியூஸ் ஏஜென்சிக்கு அளித்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.

80 கேட்டரிங் நிறுவனங்களை ஆய்வுக் குழுக்கள் கண்காணித்து விற்பனையை சீராக நடத்துவதையும், அவற்றின் பயனாளிகளுக்கு உணவுப்பொருட்களை வழங்குவதையும் உறுதிசெய்ததாக வட்டாரங்கள் தெரிவித்தன.

வர்த்தகம் மற்றும் கைத்தொழில் அமைச்சகத்தின் ஹாட்லைன் தொலைபேசி எண் 135 வழியாக 269 புகார்களையும், அழைப்பு மையங்கள் மூலம் 19 புகார்களையும் பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.