குவைத்தில் உரிமம் இல்லாத கடைகள் மற்றும் காலாவதியான பொருட்கள் பறிமுதல்..!!

Kuwait Seized shops
Photo Credit : IIK

குவைத் நகராட்சியுடன் இணைந்து மனிதவளத்திற்கான பொது அதிகாரசபை ஜிலீப் அல் ஷுயுக் பகுதியில் சோதனை நடத்தியது.

இந்த சோதனையில், உரிமம் இல்லாத கடைகளின் பொருட்கள்களை அதிகாரிகள் கைப்பற்றினர்.

இதையும் படிங்க : குவைத்தில் காலாவதியான குடியிருப்புடன் உள்ளவர்களுக்கு ஒரு நாளைக்கு 2 KD அபராதம்..!!

இது போன்ற உரிமம் இல்லாத கடைகளில் ஏராளமான ஊழியர்கள் வேலை செய்கிறார்கள் என்று அல்-ராய் தினசரி செய்தி தெரிவித்துள்ளது.

மேலும், கைது செய்யப்பட்ட ஊழியர்கள் தகுதிவாய்ந்த அதிகாரிகளிடம் அனுப்பப்படுவார்கள் என்றும் அவர்களுடைய முதலாளிகளின் கடைகள் இடைநிறுத்தப்படும் என்றும் அல்-ராய் தெரிவித்துள்ளது.

இதனை தொடர்ந்து, ஃபர்வானியாவில் சோதனை நடத்தியபோது அங்குள்ள ஒரு கிடங்கில் காலாவதியான உணவுப்பொருட்கள் கைப்பற்றப்பட்டது.

இதையும் படிங்க : குவைத்தில் தற்போது 95 சதவீதம் குடிமக்கள் அரசு வேளைகளில் உள்ளனர்..!!

உள்துறை அமைச்சகத்தின் பொது புலனாய்வுத் துறையுடன் இணைந்து உணவு மற்றும் ஊட்டச்சத்துக்கான பொது அதிகாரசபையின் ஆய்வுத் துறை இந்த சோதனையில் ஈடுபட்டுள்ளது.

Photo credit : IIK

மேலும், அதிகாரிகள் கடையை மூடினர் மற்றும் கடையை பொது வழக்கு விசாரணைக்கு அனுப்பினர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : குவைத்தின் சபா அல்-அஹ்மத் பகுதியில் புதிதாக இரண்டு சுகாதார மையங்களை சுகாதார அமைச்சர் திறந்து வைத்தார்..!!

குவைத் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

👉Facebook

👉 Twitter