பிலிப்பைன்சின் வீட்டுத் வேலைசெய்பவர்களின் தடைக்கு குவைத் மாற்றுதீர்வு தேடி வருகிறது….

Philippines domestic workers banned from going to Kuwait (Image Credit: Clint Egbert/Gulf News)

சமீபத்தில் பிலிப்பைன்ஸ் நாட்டின் வீட்டு வேலைசெய்பவர்களை குவைத் செல்ல பிலிப்பைன்ஸ் நாடு தடை விதித்ததையடுத்து நேபால், எத்தியோப்பியா, இந்தியா மற்றும் இந்தோனேசியா போன்ற நாடுகளின் உதவியை குவைத் நாடியுள்ளதாக அல் கபாஸ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொது மனிதவள அதிகாரியான டாக்டர் முபாரக் அல்-அஸ்மி கூறுகையில், எத்தியோப்பிய தூதுக்குழு தங்களது வீட்டுப் பணியாளர்களை குவைத்துக்கு அனுப்பும் சாத்தியம் குறித்து பேசப்பட்டுவருகிறது. மேலும், இது தொடர்பாக குவைத் புதிய விதிகளை கொண்டு வருவதால் பிலிப்பைன்ஸ் பணிப்பெண் ஜானெல்லே வில்லாவெண்டே போன்ற பெண்கள் எதிர்கொண்ட பிரச்சினைகள் தடுக்கப்படும் என்று கூறியுள்ளார்.

செய்தி மற்றும் சமூக ஊடகங்களில் செய்தி வெளியாகும் வரை குவைத் அதிகாரிகளுக்கு பிலிப்பைன்ஸ் பணிப்பெண்ணின் மரணம் குறித்து எதுவும் தெரிந்திருக்கவிலலை என்று வட்டாரங்கள் தெரிவித்தன. மேலும், தடை தொடர்பாக குவைத் அதிகாரிகள் எந்தவொரு அதிகாரபூர்வ கடிதமும் பெறவில்லை என்றும் வட்டாரங்கள் தெரிவித்தன, எனவே இந்த முடிவை அறிய வெளியுறவு அமைச்சகம் மற்றும் பிலிப்பைன்ஸ் தூதரகத்துடன் சந்திப்பு நடைபெற்றுள்ளது.

இறந்த பணிப்பெண் குறித்து, அல்-அஸ்மி கூறுகையில், இந்த சம்பவம் குறித்து குவைத் அதிகாரிகள் விரைவாக விசாரணையைத் தொடங்கினர், அந்த பெண்ணிற்கு சம்பளம் வழங்காமல் இருந்துள்ளதாகவும் பின்னர் இந்த பிரச்சனை சரிசெய்யப்பட்டுள்ளது , பிறகு இதே பிரச்னை மீண்டும் தொடந்துள்ளதாக கூறினார்.

இரு நாடுகளுக்கும் பயனளிக்கும் வகையில் தெளிவான தீர்வுகள் இல்லாததால் பிலிப்பைன்ஸில் இருந்து தொழிலாளர்கள் திரும்புவது குறித்து குவைத் மற்றும் மணிலா இடையேயான பேச்சுவார்த்தைகள் இன்னும் முடியாமல் உள்ளது என்று வட்டாரங்கள் உறுதிப்படுத்தின. இதற்கிடையில், விடுமுறையில் சென்ற வீட்டுத் தொழிலாளர்கள் வேலைக்கு திரும்பும்மோது சம்பளம் மற்றும் அவர்களின் பாதுகாப்பிற்கும் லேபர் அலுவலகம் பொறுப்பேற்கவேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.