குவைத்தில் பொது சாலைகளில் மின்சார ஸ்கூட்டர்களைப் பயன்படுத்த தடை – MOI

Kuwait scooter ban
Photo Credit : IIK

குவைத்தில் பொது சாலைகளில் மின்சார ஸ்கூட்டர்களைப் பயன்படுத்துவதை MoI தடை செய்துள்ளது.

குவைத்தில் பொது சாலைகளில் மின்சார ஸ்கூட்டர்களை ஓட்டுவதற்கு தடை என்று உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க : குவைத்தில் கொரோனா காலகட்டத்தில் பணிப்பெண்களை துன்புறுத்துதல் அதிகரிப்பு..!!

போக்குவரத்து விதி 207வது பிரிவின்படி, சட்டத்தை மீறும் வாகனங்கள் இரண்டு மாதங்களுக்கு மிகாமல் கைப்பற்றி வைக்கப்படும் மற்றும் அபராதம் விதிக்கப்படும்.

இதுபோன்ற வாகனங்கள் வாகன ஓட்டிகள் மற்றும் பிற சாலை பயனர்களின் உயிருக்கு பெரும் ஆபத்தை விளைவிக்கும் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.

எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் குடியிருப்பு பகுதிகளில் உள்ளூர்வாசிகளால் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன.

அணைத்து வயதினரும் மாலை நேரங்களில் இது போன்ற ஸ்கூட்டர் பயணங்களை மேற்கொள்ளவது வழக்கமாக உள்ளது.

அவற்றில் சில கூட்டுறவு சங்கங்கள் அல்லது அப்பகுதியில் உள்ள பொது பூங்காக்களை சென்றடைய ஒரு எளிய வழியாக பொதுமக்கள் பயன்படுத்தப்படுகின்றன என்றும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க : குவைத்தில் சுகாதார விதிமுறைகளுக்கு கட்டுப்படாதவர்களுக்கு உடனடியாக கைது..!!

குவைத் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

👉Facebook

👉 Twitter