குவைத்தில் குடியிருப்பு சட்ட மீறலில் உள்ளவர்கள் இந்த ஆண்டு இறுதிக்குள் வெளியேற வேண்டும் – MOI

kuwait residency violaters
Photo credit : Arab Times

ஜனவரி 2020க்கு முன் குவைத்தில் குடியிருப்பு சட்ட மீறலில் உள்ளவர்கள் டிசம்பர் 1 முதல் 31குள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும்.

குவைத்தின் துணை பிரதமரும் மற்றும் உள்துறை அமைச்சருமான அனஸ்-அல்-சலே வெளியிட்ட அறிக்கையில், 2020 ஜனவரி 1ஆம் தேதிக்கு முன்பு முதல் குவைத்தில் வசிக்கும் சட்டத்திற்கு புறம்பாக உள்ளவர்கள் அபராதம் செலுத்தி விட்டு தாயகம் திரும்ப வேண்டும்.

இதையும் படிங்க : குவைத்தில் கொரோனா காலகட்டத்தில் பணிப்பெண்களை துன்புறுத்துதல் அதிகரிப்பு..!!

இல்லையெனில், நிபந்தனைகளுக்கு உட்பட்டு தங்களுடைய வேலை விசாக்களை சரி செய்யும்மாறு தெரிவித்துள்ளார்.

இதற்கான கால அவகாசம் டிசம்பர் 1 2020 முதல் டிசம்பர் 31 2020 வரை ஆகும்.

இதனை தொடர்ந்து, ஜனவரி 1ஆம் தேதிக்கு முன்னர் குவைத்தில் உள்ள குடியிருப்பு மீறலில் உள்ள ஊழியர்கள் அபராதம் செலுத்திவிட்டு வெளியேற வேண்டும்.

தொடர்ந்து வேலையை தொடர நிபந்தனைகளுக்கு உட்பட்டு விசாக்களை சரி செய்யுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை செய்யாமல் இருப்பவர்கள், வாழ்நாள் முழுவதும் குவைத் வரும் வாய்ப்பை இழந்து விடுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த முடிவு குவைத்தில் உள்ள 60,000 வீட்டுத் தொழிலாளர்கள் உட்பட சுமார் 130,000 வெளிநாட்டவர்களுக்கு பயனளிக்கும் என்று அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன.

இதையும் படிங்க : குவைத்தில் சுகாதார விதிமுறைகளுக்கு கட்டுப்படாதவர்களுக்கு உடனடியாக கைது..!!

குவைத் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

👉Facebook

👉 Twitter