1,856,390 குடியிருப்பு விசாக்கள் ஆன்லைனில் புதுப்பிப்பு..!!

Kuwait Residence Renewal
1,856,390 residency visas renewed online. (Photo : IIK)

குவைத்தில் கொரோனா தொற்றின் காரணமாக குடியிருப்பு விசாக்களை ஆன்லைனில் புதுப்பிக்குமாறு உள்துறை அமைச்சகம் முன்னதாக தெரிவித்திருந்தது.

அதன் அடிப்படையில் இதுவரை 1,856,390 குடியிருப்பு விசாக்களை ஆன்லைனில் புதுப்பித்துள்ளதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க : குவைத்தில் காலாவதியான குடியிருப்புடன் உள்ளவர்களுக்கு ஒரு நாளைக்கு 2 KD அபராதம்..!!

ஆன்லைன் மூலம் விசாவை புதுப்பிக்கும் முறை முயற்சியையும் நேரத்தையும் குறைக்க உதவுகிறது என்றும் ஆன்லைனில் வேலைகளை முடிக்க பாதுகாப்புத் துறைகள் ஆர்வமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குவைத்தில் வசிக்கும் மக்கள் காலாவதியான குடியிருப்பு விசாவை புதுப்பிக்க (செப்டம்பர் 1) முதல் கூடுதலாக மூன்று மாதங்களுக்கு உள்துறை அமைச்சகம் சலுகையை அறிவித்துள்ளது.

இதையும் படிங்க : குவைத்தில் தற்போது 95 சதவீதம் குடிமக்கள் அரசு வேளைகளில் உள்ளனர்..!!

மேலும், அனைத்து முதலாளிகளும் தங்கள் ஊழியர்களின் குடியிருப்பு விசாக்களை புதுப்பித்து கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

குவைத்தில் வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதால் சுகாதார அதிகாரிகள் அறிவித்துள்ள சுகாதார நடவடிக்கைகளை பின்பற்றுமாறு குடிமக்கள் மற்றும் குடியிருப்பாளர்களை வலியுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : குவைத்தின் சபா அல்-அஹ்மத் பகுதியில் புதிதாக இரண்டு சுகாதார மையங்களை சுகாதார அமைச்சர் திறந்து வைத்தார்..!!

குவைத் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

👉Facebook

👉 Twitter