சுமார் 300,000க்கும் மேற்பட்ட வெளிநாட்டினரின் Residency அனுமதிகளை புதுப்பித்த குவைத்!

(Getty Images)

COVID-19 தொற்றுநோய் தொடங்கியதிலிருந்து, குவைத் நாட்டை விட்டு வெளியே சிக்கியுள்ள சுமார் 300,000க்கும் மேற்பட்ட வெளிநாட்டினரின் Residency அனுமதிகளை குவைத் புதுப்பித்துள்ளது.

இதனை மனிதவளத்திற்கான பொது ஆணையம் (PAM) மற்றும் சிவில் தகவல் பொது ஆணையம் (PACI), உள்துறை அமைச்சகத்துடன் இணைந்து இந்த புதுப்பிப்புகளை செய்ததாக Al Qabas தெரிவித்துள்ளது.

பெரும்பான்மையான இந்திய நாட்டவர்கள் குவைத் திரும்பினர்!

இந்த புதுப்பித்தல் செயல்முறை அனைத்தும் இணையம் வழியாக செய்யப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வெளிநாட்டில் உள்ளவர்கள் குவைத்தில் இல்லாமல் தங்கள் அனுமதிகளை புதுப்பிக்க இது அனுமதி அளிக்கிறது.

தங்கள் விசாக்களை புதுப்பித்தவர்கள் ஆறு மாதங்களுக்கும் மேலாக நாட்டிற்கு வெளியே இருந்தாலும் மீண்டும் குவைத்துக்குள் நுழைய அனுமதிக்கப்படுவர்.

ஒருபுறம், Residency அனுமதிகளை புதுப்பிக்காத சுமார் 33,414 பேரின் வேலை அனுமதிகளை (work permits) PAM ரத்து செய்துள்ளது.

மேலும், மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் அசீல் அல் மஸீத் (Aseel Al Mazyed) அவர்கள், சுமார் 91,854 அனுமதிகள், 44,264 ஓட்டுநர் உரிமங்கள் மற்றும் 30,700 கோப்புகளை ரத்து செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இவை அனைத்தும் ஒரு வருடத்திற்கு மேல் காலாவதியானது குறிப்பிடத்தக்கது.

குவைத்தில் டேங்கர் வெடித்து ஆசிய நாட்டை சேர்ந்தவர் உட்பட இருவர் உயிரிழப்பு

குவைத் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

👉Facebook

👉 Twitter