குவைத் ரெட் கிரசண்ட் (KRCS) Sabah Al-salem பகுதியில் வசிப்பவர்களுக்கு உணவு பெட்டிகள் மற்றும் பால் விநியோகம்..!!

Kuwait Red Crescent feeds Sabah Al-Salem residents. (photo : IIK)

குவைத் ரெட் கிரசண்ட் (KRCS) செவ்வாய்க்கிழமை (ஜூன் 16) அன்று உள்துறை அமைச்சகத்தின் ஒத்துழைப்புடன் Sabah Al-salem பகுதியில் வசிப்பவர்களுக்கு 1,000 உணவு பெட்டிகள் மற்றும் பால் கேன்களை வழங்கியது.

இந்த முயற்சியின் மூலம், ஜிலீப் அல்-ஷுயுக், கைதன் மற்றும் ஃபர்வானியா ஆகிய பகுதிகளில் இதேபோன்ற முயற்சிகளைத் தொடர்ந்து அதன் மனிதாபிமானப் பங்கையும் சமூகப் பொறுப்பையும் நிறைவேற்ற இந்த அமைப்பு விரும்புகிறது என்று KRCS பொதுச்செயலாளர் அல்-பர்ஜாஸ் அவர்கள் குவைத் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.

தொழிலாளர்கள் மற்றும் குறைந்த வருமானம் உள்ள குடும்பங்களுக்கு KRCS மறுநாள் சபான் பகுதியில் தனது நடவடிக்கைகளை மீண்டும் தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உணவுப் பொட்டலங்களில் அத்தியாவசிய உணவுப் பொருட்கள் உள்ளதாகவும் மற்றும் அவை ஒரு மாதத்திற்கு மேல் நீடிக்கும் அளவு உள்ளதாக அல்-பர்ஜாஸ் தெரிவித்தார்.

அல்-பர்ஜாஸ் அவர்கள் இந்த இக்கட்டான காலங்களில் குவைத் மக்களின் தாராள மனப்பான்மையைப் பாராட்டினார்.

குவைத் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

Facebook : https://m.facebook.com/tamilmicsetkuwait/posts/?ref=bookmarks&mt_nav=0

Helo : https://m.helo-app.com/al/RpMeTUjbr

Twitter : https://twitter.com/kuwaittms?s=08