குவைத்தில் முழு ஊரடங்கில் உள்ள Jleeb Al-Shuyoukh பகுதியில் வசிக்கும் தொழிலாளர்கள் மற்றும் மக்களுக்கு 1,000 உணவு பெட்டிகளை KRCS விநியோகித்து..!!

Kuwait Red Crescent distributes food boxes in Jleeb Al-Shuyoukh. (photo : Times Kuwait)

குவைத் ரெட் கிரசண்ட் சொசைட்டி (KRCS) சனிக்கிழமை (ஜூன் 6) அன்று உணவுப் பொருட்கள் உள்ளடக்கிய 1,000 பெட்டிகளை கொரோனா வைரஸ் காரணமாக முழு ஊரடங்கில் உள்ள Jleeb Al-Shuyoukh பகுதியில் வசிக்கும் தொழிலாளர்கள் மற்றும் மக்களுக்கு விநியோகித்தது.

முழு ஊரடங்கின் கீழ் உள்ள பகுதிகளுக்கு உணவு பெட்டிகளை விநியோகிக்க KRCS முன்னுரிமை அளித்துவருகிறது, அதாவது ஜிலீப் அல்ஷுயுக், மஹபவ்லா, ஃபர்வானியா, கைதான் மற்றும் ஹவல்லி போன்ற பகுதிகளுக்கு விநியோகித்ததாக சொசைட்டியின் பொதுச்செயலாளர் அல்பார்ஜாஸ் அவர்கள் குவைத் செய்தி நிறுவனத்திற்கு (KUNA) அளித்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

மேலும், KRCS தொடர்ந்து சமூகத்தின் அனைத்து பிரிவுகளையும் ஆதரித்து வருவதாகவும், கொரோனா வைரஸ் தொற்றுநோயால் ஏற்படும் அவர்களின் துன்பத்தைத் தணிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

Kuwait Red Crescent distributes food boxes in Jleeb Al-Shuyoukh. (photo : Times Kuwait)
Kuwait Red Crescent distributes food boxes in Jleeb Al-Shuyoukh. (photo : Times Kuwait)

உணவு பெட்டியில் அரிசி, எண்ணெய், சர்க்கரை, தேநீர் மற்றும் பதிவு செய்யப்பட்ட ஆயத்த உணவு ஆகியவை ஒரு மாதத்திற்கு போதுமானதாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த பகுதிகளில் நடமாட்டத்தை கட்டுப்படுத்த சுகாதார அதிகாரிகளின் அறிவுறுத்தல்களின்படி, அங்கு வாழும் மக்கள் நடமாட்டத்தைத் தடுக்கும் பொருட்டு தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் உணவுப் பெட்டிகளை விநியோகித்து வருவதாக அல்-பர்ஜாஸ் அவர்கள் கூறினார்.

குவைத் ரெட் கிரசண்ட் நாடு முழுவதும் தேவைப்படும் குடும்பங்களுக்கான உணவுப் பெட்டிகளையும் வழங்குகிறது, மேலும் தொற்றுநோயைக் கட்டுப்படுத்த KRCS இன் திட்டத்திற்கு தனியார் துறையினர் பங்களிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

மேலும், தங்கள் நாட்டிற்கு சேவை செய்து சமூகத்தின் திட்டங்களில் பங்கேற்ற தன்னார்வலர்களுக்கு அவர் நன்றி தெரிவித்தார்.