COVID-19; குவைத்தில் கொரோனா வைரஸால் பலியாகியுள்ள முதல் மருத்துவர்..!!

Kuwait records the first death of Doctor from Covid-19.

குவைத்தின் Zain மருத்துவமனையில் E.N.T பிரிவில் பணிபுரிந்து வந்த எகிப்திய மருத்துவர் Dr. தாரிக் ஹுசைன் முகைமர் அவர்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர் பல ஆண்டுகளாக குவைத்தில் E.N.T மருத்துவராக சேவையாற்றி வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையடுத்து, மருத்துவர் முகைமர் மறைவுக்கு அவருடன் பணியாற்றி பணியாளர்கள் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு குவைத் சுகாதாரத்துறை அமைச்சர் Dr. Basel Al-Sabah அவர்கள் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.