குவைத், எகிப்து, இந்தியா சுற்றுச்சூழல் மற்றும் நிலைத்தன்மை தரவரிசையில் மோசமான இடம்..!!

Kuwait Ranks Environment
Photo Credit : Arab Times

உலக சுற்றுச்சூழலில் இரண்டாவது தரமற்ற இடத்தில் குவைத்தின் சுற்றுச்சூழல் மற்றும் நிலைத்தன்மை உள்ளது.

சுற்றுச்சூழல் மற்றும் நிலைத்தன்மை தரவரிசையில் எகிப்து 58 வது இடத்தையும் மற்றும் குவைத் 59 வது இடத்தை பிடித்துள்ளது.

இதையும் படிங்க : குவைத்தில் கொரோனா காலகட்டத்தில் பணிப்பெண்களை துன்புறுத்துதல் அதிகரிப்பு..!!

நாட்டு மக்களுக்கு சுற்றுச்சூழல் மீது ஆர்வம் இல்லாததால் நாடு இந்த நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், குவைத்தில் உள்ள வெளிநாட்டவர்களில் 30 சதவீதத்திற்கும் அதிகமானோர் நாட்டின் உள்கட்டமைப்பு மற்றும் சுகாதாரத்தை எதிர்மறையாக கணக்கெடுப்பில் தெரிவித்துள்ளனர்.

கடந்த 2019 ஆம் ஆண்டு லெகாட்டம் செழிப்பு அறிவிப்பின்படி, சுற்றுச்சூழளுக்காக முதலீடு செய்வதற்கு குவைத் மோசமாக செயல்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குவைத், எகிப்து மற்றும் இந்தியா போன்ற நாடுகள் மற்ற இடங்களை விட செயல்திறனில் மிகவும் மோசமாக இருக்கிறது என்று கணக்கெடுப்பு தெரிவித்துள்ளது.

குவைத்தில் உடல்நலம் மற்றும் கழிவு மேலாண்மை திறனற்றது என்று ஆஸ்திரேலிய குடியிருப்பாளர் தெரிவித்துள்ளார்.

குவைத்தில் வசிக்கும் தென்னாப்பிரிக்க வெளிநாட்டவர், சுற்றுச்சூழழை புறக்கணிக்கும் கலாச்சாரம் உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

இதனை தொடர்ந்து, குவைத்தில் உள்ள அமெரிக்க குடியிருப்பாளர் பெரும்பாலும் சுற்றுச்சூழல் பிரச்சனைகளை கவனிப்பதில்லை என்று தெரிவித்துள்ளார்.

மேலும், மோசமான காற்றின் தரம் மற்றும் இயற்கை பற்றாக்குறையை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : குவைத்தில் சுகாதார விதிமுறைகளுக்கு கட்டுப்படாதவர்களுக்கு உடனடியாக கைது..!!

குவைத் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

👉Facebook

👉 Twitter