குவைத்தில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு…

Kuwait rain thunder
Photo Credit : Times Kuwait

குவைத்தில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறைந்த அல்லது அதற்கும் அதிகமான மேகங்கள் பரவி, குமுலஸ் மேகங்களுடன் குறுக்கிட்டு, சில நேரங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று குவைத் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

இதையும் படிங்க : குவைத்தில் கொரோனா காலகட்டத்தில் பணிப்பெண்களை துன்புறுத்துதல் அதிகரிப்பு..!!

மேலும், இந்த மழை தூசி நிறைந்த காற்றோடு தொடரும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

இது சில பகுதிகளில் சாலைகளில் செல்லபவர்களுக்கு பாதையை மறைக்கும் ஆபத்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், வெள்ளிக்கிழமை (நவம்பர் 13) நண்பகல் வரை இந்த மழை பெய்யும் வாய்ப்பு தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மழைப்பொழிவு லேசானதாகவும் மற்றும் சில பகுதிகளில் கனமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், வெள்ளிக்கிழமை பிற்பகுதியில் வானிலை படிப்படியாக மேம்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : குவைத்தில் சுகாதார விதிமுறைகளுக்கு கட்டுப்படாதவர்களுக்கு உடனடியாக கைது..!!

குவைத் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

👉Facebook

👉 Twitter