குவைத்தில் மழலையர் (KG) பள்ளிகளில் புனித குர்ஆனைக் கற்பிக்க ஒப்புதல்.!!

Kuwait Quran Kindergardens
Kuwait approves a proposal to teach the Holy Quran at kindergardens. (Photo Credit : TimesKuwait)

குவைத்தில் உள்ள மழலையர் பள்ளிகளில் (kindergardens) புனித குர்ஆனைக் (Quran) கற்பிக்க பாராளுமன்றம் மற்றும் அரசாங்கம் ஒப்புதல் அளித்துள்ளது என்று அரபு நாளிதழ் தெரிவித்துள்ளது.

இந்த குழந்தைகளுக்கு சிறு வயதிலேயே புனித குர்ஆனைக் கற்பித்தால் இஸ்லாமிய கட்டளைகளை கடைபிடிக்க எளிமையாக இருக்கும் என்று ஆசிரியர் எம்.பி. முகமது ஹைஃப் விளக்கம் அளித்துள்ளார்.

இதையும் படிங்க : குவைத்தில் காலாவதியான குடியிருப்புடன் உள்ளவர்களுக்கு ஒரு நாளைக்கு 2 KD அபராதம்..!!

மழலையர் பள்ளி என்பது குழந்தையை வளர்ப்பதற்கான முதன்மை கல்வியில் ஒன்றாகும்.

மேலும், சிறு வயதிலேயே உண்மையான இஸ்லாமிய வழிமுறையை கடைபிடிக்கும் தலைமுறையாக உருவாக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

மழலையர் பள்ளிகளின் பாடத்திட்டத்தில் புனித குர்ஆனின் விஷயத்தை அறிமுகப்படுத்த வேண்டியது அவசியம் என்றும் முகமது ஹைஃப் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க : குவைத்தில் தற்போது 95 சதவீதம் குடிமக்கள் அரசு வேளைகளில் உள்ளனர்..!!

இதனை தொடர்ந்து, சிறு வயதில் குர்ஆனை ஓதுவது மற்றும் மனப்பாடம் செய்வது குழந்தைகளின் மனத்திறனை அதிகரிக்கிறது என்று தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த கல்வி இஸ்லாமிய ஆசிரியர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் என்றும் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : குவைத்தின் சபா அல்-அஹ்மத் பகுதியில் புதிதாக இரண்டு சுகாதார மையங்களை சுகாதார அமைச்சர் திறந்து வைத்தார்..!!

குவைத் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

👉Facebook

👉 Twitter