குவைத்தில் தனிமைப்படுத்தப்பட்ட காலத்தை குறைக்க சுகாதார அதிகாரிகள் எதிர்ப்பு..!!

Health authorities oppose shortening of quarantine period
Health authorities oppose shortening of quarantine period. (Photo : IIK)

குவைத்தில் கட்டாய தனிமைப்படுத்தப்பட்ட காலத்தைக் குறைத்தல் மற்றும் தடைசெய்யப்பட்ட 34 நாடுகளின் பட்டியலை மறுஆய்வு செய்வது தொடர்பாக சுகாதார அதிகாரிகளின் முடிவை எதிர்பார்த்து அனைவரும் காத்திருக்கையில், வெளிநாட்டிலிருந்து வருபவர்களுக்கு தனிமைப்படுத்தப்பட்ட காலத்தில் எந்த மாற்றமும் இல்லை என்று வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

தனிமைப்படுத்தப்பட்ட காலத்தை குறிப்பிட்ட 14 நாட்களுக்கு பதிலாக மற்ற நாடுகளைப் போல 7 நாட்களாகக் குறைக்க முன்மொழியப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குவைத்திற்கு வருகைதரும் பயணிகளின் தனிமைப்படுத்தப்பட்ட காலத்தை 14 நாட்களுக்கு பதிலாக 7 நாட்களாகக் குறைக்க சிவில் ஏவியேஷன் இயக்குநரகம் முன்மொழிந்தது.

இதையும் படிங்க : குவைத்தில் காலாவதியான குடியிருப்புடன் உள்ளவர்களுக்கு ஒரு நாளைக்கு 2 KD அபராதம்..!!

வெளிநாட்டிலிருந்து வருபவர்களுக்கு தனிமைப்படுத்தப்பட்ட காலத்தில் எந்த மாற்றமும் இல்லை என்று சுகாதார அமைச்சகத்தின் அதிகாரிகளால் முடிவு வழங்கப்பட்டு அறிவிக்கப்பட்டது.

மேலும், இந்த முடிவு கொரோனா வைரஸின் தொற்று நிலைமை குறித்த மதிப்பீட்டின்படி வழங்கப்பட்ட பரிந்துரைகளுக்கு ஏற்ப உள்ளதால் நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்கு தனிமைப்படுத்தபட வேண்டும் என்று சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதையும் படிங்க : குவைத்தில் தற்போது 95 சதவீதம் குடிமக்கள் அரசு வேளைகளில் உள்ளனர்..!!

குவைத்திற்குள் நுழைய தடைவிதிக்கப்பட்டுள்ள 34 நாடுகளின் பட்டியலை சுகாதார அமைச்சகம் தொடர்ந்து மதிப்பீடு செய்யப்படுவதாக ஆதாரங்கள் சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும், இதனால் பட்டியலில் இருந்து சில அகற்றப்படலாம் அல்லது தடைவிதிக்கப்பட்டுள்ள நாடுகளின் சுகாதார மதிப்பீடு மற்றும் வைரஸ் பாதிப்பு நிலைமைகளின் அடிப்படையில் புதிதாக நாடுகள் சேர்க்கப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : குவைத்தின் சபா அல்-அஹ்மத் பகுதியில் புதிதாக இரண்டு சுகாதார மையங்களை சுகாதார அமைச்சர் திறந்து வைத்தார்..!!

குவைத் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

👉Facebook

👉 Twitter