குவைத்தில் ஜூன் முதல் தமிழர்கள் உட்பட 105 இந்திய துறைமுக ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கப்படவில்லை..!!

Kuwait port workers salary issue
105 Indians in Kuwait not paid salary since June. (Photo : Arabian Bussiness)

குவைத்தில் அமைந்துள்ள ஷுஐபா துறைமுகத்தில் பணிபுரியும் 105 இந்தியர்களுக்கு சம்பளம் வழங்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த 105 இந்தியர்களில் தமிழகத்தை சேர்ந்தவர்கள் 99 நபர்கள் ஆவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்களுக்கு கடந்த ஜூன் மாதம் முதல் சம்பளம் வழங்கப்படவில்லை என்றும், இவர்கள் இது தொடர்பாக இந்திய தூதரகத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : குவைத்தில் காலாவதியான குடியிருப்புடன் உள்ளவர்களுக்கு ஒரு நாளைக்கு 2 KD அபராதம்..!!

குவைத்தில் உள்ள இந்திய தூதரகம் தனது குடிமக்களுக்கு தேவையான அனைத்து சேவைகளையும் வழங்கும் என்றும், இந்திய சமூகம் எதிர்க்கொள்ளும் எந்தவொரு பிரச்சனையும் தீர்க்க குவைத் அதிகாரிகளுடன் எப்போதும் பணியாற்றிவருவதாகவும் இந்திய தூதர் எச்.இ. சிபி ஜார்ஜ் அவர்கள் அல் ராய் செய்தித்தாளில் உறுதிப்படுத்தியுள்ளார்.

இந்த ஊழியர்களுக்கு அடிப்படை தேவைகளைகூட பூர்த்திசெய்ய முடியாமல் அவதிப்படுகின்றனர் மற்றும் வாடகை செலுத்த முடியாமல் சிரமப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுமட்டுமின்றி, அக்டோபர் மற்றும் டிசம்பர் மாதங்களுக்கு இடையில் அவர்களது குடியிருப்பு காலாவதியாக உள்ளது என்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : குவைத்தில் தற்போது 95 சதவீதம் குடிமக்கள் அரசு வேளைகளில் உள்ளனர்..!!

தொண்டு நிறுவனங்களும், சமூக சேவை செய்பவர்களும் அவர்களுக்கு உணவு வழங்கி வருகின்றனர்.

மேலும், வாடகை செலுத்த முடியாததால் தாங்கள் வீடுகளில் இருந்து வெளியேற்றப்படுவோமோ என்ற அச்சத்தில் அவர்கள் வாழ்ந்து வருகின்றனர்.

இந்திய தூதரகம் இது தொடர்பான பிரச்சனைகளை தீர்ப்பதற்கு சம்பந்தப்பட்ட நிறுவனத்துடன் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : குவைத்தின் சபா அல்-அஹ்மத் பகுதியில் புதிதாக இரண்டு சுகாதார மையங்களை சுகாதார அமைச்சர் திறந்து வைத்தார்..!!

குவைத் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

👉Facebook

👉 Twitter