குவைத்தில் ஊதியம் பெறாத 105 இந்திய துறைமுக ஊழியர்களின் துயரத்தை தீர்க்க PAM பேச்சுவார்த்தை..!!

PAM acts swiftly to resolve woes of 105 unpaid Indian port workers. (Photo : Arabian Bussiness)

குவைத்தில் அமைந்துள்ள ஷுஐபா துறைமுகத்தில் பணிபுரியும் தமிழர்கள் 105 இந்தியர்களுக்கு கடந்த ஜூன் மாதம் முதல் சம்பளம் வழங்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஊழியர்கள் அடிப்படை தேவைகளைகூட பூர்த்திசெய்ய முடியாமல் அவதிப்படுகின்றனர் என்றும், வாடகைகூட செலுத்த முடியாமல் சிரமப்படுகின்றனர்.

இதையும் படிங்க : குவைத்தில் காலாவதியான குடியிருப்புடன் உள்ளவர்களுக்கு ஒரு நாளைக்கு 2 KD அபராதம்..!!

மேலும், ஊழியர்களின் குடியிருப்பு காலாவதியாக உள்ளது இந்த பிரச்சனை தெரிவிக்கப்பட்டதை அடுத்து, புகார் மனிதவள பொது ஆணையத்திடம் வந்துள்ளது.

இந்த புகார்கள் வந்துள்ளதால் பிரச்சினையைத் தீர்க்க மனிதவள பொது ஆணையத்தின் அதிகாரிகள் மங்காஃப் பகுதியில் உள்ள 105 ஊழியர்களின் இல்லத்திற்குச் சென்று விசாரித்துள்ளது.

இதையும் படிங்க : குவைத்தில் தற்போது 95 சதவீதம் குடிமக்கள் அரசு வேளைகளில் உள்ளனர்..!!

இந்த விசாரணையில் ஊழியர்களுக்கு சம்பளத்தை செலுத்தத் தவறியது, குடியிருப்பு புதுப்பிக்கப்படவில்லை மற்றும் நிறுவனம் வைத்திருந்த பாஸ்போர்ட்டுகளைத் திருப்பித் தருவது மற்றும் வீட்டுவசதி இல்லை போன்ற புகார்கள் தெரிவிக்கப்பட்டது.

மேலும், இது தொடர்பாக மனிதவள பொது ஆணையம் சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் முக்கிய பிரதிநிதியிடம் பிரச்சனையை தீர்க்க பேச்சு வார்த்தை நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : குவைத்தின் சபா அல்-அஹ்மத் பகுதியில் புதிதாக இரண்டு சுகாதார மையங்களை சுகாதார அமைச்சர் திறந்து வைத்தார்..!!

குவைத் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

👉Facebook

👉 Twitter