COVID-19 எதிரான உலகளாவிய முயற்சிகளுக்கு ஆதரவாக குவைத் மொத்தம் 100 மில்லியன் டாலர் வழங்குவதாக உறுதி..!!

Kuwait pledges $100m for global efforts against COVID-19. (photo : Pixabay)

கொரோனா வைரசுக்கு எதிரான உலகளாவிய முயற்சிகளுக்கு ஆதரவாக குவைத் மொத்தம் 100 மில்லியன் டாலர்களை வழங்குவதாக உறுதியளித்துள்ளதாக குவைத்தின் வெளியுறவு மந்திரி அகமது அல் நாசர் அவர்கள் தெரிவித்துள்ளார்.

இதில் உலக சுகாதார அமைப்புக்கு (WHO) 60 மில்லியன் டாலர்களும், ஐரோப்பிய ஒன்றியத்திற்கு (EU) 40 மில்லியனும் அடங்கும் என்று அமைச்சர் தெரிவித்தார்.

அல்-நாசர் அவர்கள் கொரோனா வைரஸ் பல நாடுகளில் ஏராளமான மக்களைக் கொல்வதை நாங்கள் கண்டிருக்கிறோம் என்றும், இது முன்னேறிய மற்றும் வளரும் நாடுகளுக்கிடையில் அல்லது ஏழை மற்றும் பணக்கார நாடுகளுக்கு இடையில் இது பரவுவதில் தொற்றுநோய் எந்த வித்தியாசத்தையும் ஏற்படுத்தவில்லை என்று அந்த அவர் தெரிவித்தார்.

மேலும், குவைத்தில் இதுவரை மொத்தம் 44,942 வைரஸ் தொற்றுகளையும் 348 இறப்புகளையும் பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

குவைத் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

Facebook : https://m.facebook.com/tamilmicsetkuwait/posts/?ref=bookmarks&mt_nav=0

Helo : https://m.helo-app.com/al/RpMeTUjbr

Twitter : https://twitter.com/kuwaittms?s=08