குவைத் குடிமக்கள் மூன்று நாட்களுக்குள் 75 விமானங்கள் மூலம் தாய்நாடு திரும்ப திட்டம்..!!

kuwait plans to bring their citizens in 75 flights in three days.

குவைத் குடிமக்கள் இரவுப் பகலின்றி நேற்று (19.04.2020) காலை முதல் தற்போது வரையில் தாய்நாடு திருமப்பிய வண்ணம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இன்று (20.04.2020) மற்றும் நாளையும் (21.04.2020) இந்த நடவடிக்கைகள் தொடரும் என்பது குறிப்பிடத்தக்கது.

நேற்று 28 விமானங்களும், இன்று 25 விமானங்களும், நாளை 22 விமானங்களும் மொத்தமாக மூன்று நாட்களில் 75 விமானங்கள் இயக்க திட்டமிட்டு நேற்று 28 விமானங்கள் வரையில் தங்கள் நாட்டின் மக்களுடன் குவைத் வந்தடைந்தது என்று செய்தி வெளியாகியுள்ளது.

இந்த மீட்பு நடவடிக்கைகள் மூன்று நாட்களுக்கு என்று தீர்மானித்து முதல்கட்டமாக நேற்று மீட்பு துவங்கியுள்ளது, கூடுதல் தகவல்கள் வரும் நாட்களில் தெரியவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.