COVID-19 : குவைத் 2020 ஆம் ஆண்டின் இறுதிக்குள் 1 மில்லியன் Pfizer தடுப்பூசிகளை பெரும்…

Kuwait vaccine pfizer
Photo Credit : AFP

முன்னணி மருந்து தயாரிப்பாளரான Pfizer மற்றும் பயோடெக்னாலஜி நிறுவனமான BioNTech திங்களன்று (நவம்பர் 9) அவர்களின் COVID-19 தடுப்பூசி 90 சதவீதத்திற்கும் அதிகமான செயல்திறன் மிக்கதாக நிரூபிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தது.

இதனை தொடர்ந்து, குவைத்தின் சுகாதார அமைச்சகம் சுமார் ஒரு மில்லியன் டோஸ் ஆர்டர் செய்துள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதையும் படிங்க : குவைத்தில் கொரோனா காலகட்டத்தில் பணிப்பெண்களை துன்புறுத்துதல் அதிகரிப்பு..!!

அல் ராய் தினசரிக்கு ஒரு ஆதாரம் கூறியதாவது, தடுப்பூசிகள் குவைத்தில் தொகுதிகளாக வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, 2020 ஆம் ஆண்டின் இறுதிக்குள் 150,000 டோஸ் வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மற்றொரு ஆதாரம் அல் கபாஸிடம், தடுப்பூசி இறக்குமதி செய்வதற்கான முடிவு அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகத்திடம் (FDA) அதிகாரப்பூர்வ ஒப்புதல் பெறுவதைப் பொறுத்து இருக்கும்.

நியூயார்க் டைம்ஸ் கருத்துப்படி, இந்த மாத இறுதியில் FDAவை அவசர ஒப்புதல் கேட்க Pfizer திட்டமிட்டுள்ளது.

முதலாம் தொகுதி தடுப்பூசிகள் முதியவர்கள், நாட்பட்ட நோய்கள் உள்ளவர்கள் மற்றும் முன்னணி தொழிலாளர்களுக்கு ஒதுக்கப்படும்.

Pfizer அதிக தடுப்பூசிகளை தயாரித்தவுடன், குவைத் நான்கு மில்லியன் அளவுகளை ஆர்டர் செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது, இது குடிமக்களுக்கும் குடியிருப்பாளர்களுக்கும் ஒதுக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : குவைத்தில் சுகாதார விதிமுறைகளுக்கு கட்டுப்படாதவர்களுக்கு உடனடியாக கைது..!!

குவைத் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

👉Facebook

👉 Twitter