தாமதத்தைத் தவிர்க்க பாஸ்போர்ட்டை முன்கூட்டியே புதுப்பிக்குமாறு தூதரகம் இந்தியர்களுக்கு அறிவுறுத்தல்..!!

Embassy advises Indians to renew passport in advance to avoid delay
Embassy advises Indians to renew passport in advance to avoid delay. (Photo : IIK)

குவைத்தில் வசிக்கும் இந்திய நாட்டை சேர்ந்த மக்கள் தங்களது பாஸ்போர்ட்களைப் புதுப்பிக்குமாறு குவைத் இந்தியத் தூதரகம் அறிவித்துள்ளது.

இந்திய மக்கள் தனது புதிய பாஸ்போர்ட்களைப் பெறுவதில் தாமதம் ஏற்படாமல் தவிர்ப்பதற்காக புதிய பாஸ்போர்ட்டுக்கான விண்ணப்பங்களை முன்கூட்டியே சமர்ப்பிக்க வேண்டும் என்று குவைத் இந்தியத் தூதரகம் அனைத்து இந்திய மக்களுக்கும் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க : குவைத்தில் காலாவதியான குடியிருப்புடன் உள்ளவர்களுக்கு ஒரு நாளைக்கு 2 KD அபராதம்..!!

மேலும், புதிய பாஸ்போர்ட்டுகளை எந்த விதமான தாமதமும் இல்லாமல் விரைவாக வழங்க தூதரகம் முயற்சிப்பதாக இந்திய தூதரகம் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சில வகையான பாஸ்போர்ட்டுகளுக்கு கட்டாயமாக காவல்துறை சரிபார்ப்பு தேவைப்படுவதால், இந்தியாவில் உள்ள அதிகாரிகளுடன் தொடர்பு கொள்ள அதிக நேரம் தேவைப்படுகிறது என்று தூதரகம் ஒரு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க : குவைத்தில் தற்போது 95 சதவீதம் குடிமக்கள் அரசு வேளைகளில் உள்ளனர்..!!

காலாவதியாகும் இரண்டு மாதங்களுக்கு முன்னர், புதிய பாஸ்போர்ட்டுக்கு அனைவரும் விண்ணப்பிக்க வேண்டும் என்று குவைத் இந்தியத் தூதரகம் அறிக்கையில் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கொரோனா வைரஸின் பாதிப்பு அதிகரித்து வருவதால் சுகாதார அதிகாரிகள் வெளியிட்டுள்ள அணைத்து முன்னெச்சரிக்கை வழிமுறைகளும் பின்பற்றுமாறு குடிமக்கள் மற்றும் குடியிருப்பாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : குவைத்தின் சபா அல்-அஹ்மத் பகுதியில் புதிதாக இரண்டு சுகாதார மையங்களை சுகாதார அமைச்சர் திறந்து வைத்தார்..!!

குவைத் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

👉Facebook

👉 Twitter