குவைத்தில் பகுதிநேர ஊரடங்கு உத்தரவு மீண்டும் அமல்படுத்தப்படலாம்..!!

Partial Curfew may be reinsisted in kuwait
Partial Curfew may be reinsisted in kuwait. (Photo : IIK)

குவைத்தில் கொரோனா காலகட்டத்தில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது, இதனை தொடர்ந்து மீண்டும் பகுதிநேர ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வரலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏனென்றால், குவைத்தில் தற்போது பருவகாலம் நெருங்கி வருகிறது, இந்த பருவக்காலத்தில் வருகின்ற நோய் கொரோனா நோய்த்தொற்றின் அறிகுறிபோல் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : குவைத்தில் காலாவதியான குடியிருப்புடன் உள்ளவர்களுக்கு ஒரு நாளைக்கு 2 KD அபராதம்..!!

மேலும், அதனை தடுக்கும் விதமாக பகுதிநேர ஊரடங்கு உத்தரவு மீண்டும் அமலுக்கு வரலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து, மக்கள் கூட்டங்கள் கூடுவது கொரோனா பரவுவதற்கு ஒரு முக்கிய காரணமாக அமைவதால், அதனை தடுக்கும் விதமாகவும் இந்த முடிவு எடுக்கக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : குவைத்தில் தற்போது 95 சதவீதம் குடிமக்கள் அரசு வேளைகளில் உள்ளனர்..!!

மேலும், குடிமக்கள் மற்றும் வெளிநாட்டினர் இதற்கு ஒத்துழைக்க வேண்டியதன் அவசியத்தையும், முக்கியத்துவத்தையும் வலியுறுத்துயுள்ளது குறிப்பிடத்தக்கது.

தற்போது, கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் கூட்டங்கள் கூடுவதை தவிர்க்கவும், சுகாதார நடைமுறைகளை பின்பற்றவும் சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க : குவைத்தின் சபா அல்-அஹ்மத் பகுதியில் புதிதாக இரண்டு சுகாதார மையங்களை சுகாதார அமைச்சர் திறந்து வைத்தார்..!!

குவைத் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

👉Facebook

👉 Twitter