குவைத்தில் வணிக விமானங்களின் சேவை தொடங்கிய முதல் நாளே 10,000க்கும் மேற்பட்ட டிக்கெட்டுகள் ரத்து..!!

Kuwait opens Airport. More than 10,000 tickets cancelled. (image credit : IIK)

வணிக (commercial) விமானங்களின் சேவைக்காக குவைத் தனது விமான நிலையத் நேற்று (ஆகஸ்ட் 1) திறந்துள்ள நிலையில், 31 நாடுகளுடன் வர்த்தக விமான சேவையை தடை செய்வதற்கான திடீர் முடிவின் பின்னர் 10,000க்கும் மேற்பட்ட டிக்கெட்டுகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த முடிவு பொருளாதார பேரழிவை ஏற்படுத்தியதாகவும், சில விமான நிறுவனங்கள், பயண மற்றும் சுற்றுலா அலுவலகங்களுக்கு பெரும் இழப்பை ஏற்படுத்தியதாகவும் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : குவைத்திற்குள் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் மேலும் சில நாடுகள் சேர்ப்பு..!!

முன்னதாக பல விமான நிறுவனங்கள் இந்தியா, எகிப்து உள்ளிட்ட இடங்களுக்கு முன்பதிவு செய்துள்ளது, அங்கு ஏராளமான வெளிநாட்டவர்கள் குவைத்துக்கு திரும்பிச் செல்ல டிக்கெட்டை முன்பதிவு செய்தனர்.

இருப்பினும், வெள்ளிக்கிழமை (ஜூலை 31) அன்று குவைத் இந்திய உட்பட 7 நாடுகளைச் சேர்ந்தவர்கள் குவைத்துக்குள் நுழைய தடை விதித்து அறிவித்தது.

இதையும் படிங்க : குவைத்திற்குள் நுழைய இந்தியர்களுக்குத் தடை; வேலையிழக்கும் ஆபத்து..!!

எகிப்து மற்றும் லெபனானில் இருந்து ரத்து கடைசி நிமிடத்தில் அறிவிக்கப்பட்டதால் சுமார் 200 பயணிகளுடன் தடை அறிவிக்கப்படுவதற்கு முன்னர் முதல் லெபனான் விமானம் இன்று குவைத் வந்து சேர்ந்தது, அதில் அனைவருமே PCR சான்றிதழை வைத்து குவைத்துக்குள் நுழைய அனுமதிக்கப்பட்டனர்.

ஆனால், மற்ற அனைத்து விமானங்களும் கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டன, இது சில விமான நிறுவனங்களுக்கு பெரும் இழப்பை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : குவைத்தில் குழந்தை விசாவை அம்மாவின் ஸ்பான்சர்ஷிப்பிற்கு மாற்றுவதற்கு தடை..!!

விமான நிலையம் திறக்கப்பட்ட முதல் நாளில், குவைத்துக்குள் செல்ல திட்டமிடப்பட்ட ஏழு விமானங்கள் எகிப்திலிருந்து புறப்படுவதற்கு முன்பே ரத்து செய்யப்பட்டதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

குவைத் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

?Facebook : https://www.facebook.com/tamilmicsetkw/

? Twitter :  https://www.twitter.com/kuwaittms