குவைத்தில் புதிய கல்வியாண்டு ஆன்லைனில் தொடக்கம்..!!

New school year begins in kuwait.
New school year begins in kuwait. (Photo : MENAFN)

குவைத் கல்வி அமைச்சரும் மற்றும் உயர்கல்வி அமைச்சருமான டாக்டர். சவுத் அல்-ஹர்பி அவர்கள் இந்த 2020-2021ஆம் ஆண்டிற்கான புதிய கல்வியாண்டு ஆன்லைனில் தொடங்குவதாக நேற்று (அக்டோபர் 03) சனிக்கிழமை அறிவித்துள்ளார்.

மேலும், தொடக்கப்பள்ளி, இடைநிலை மற்றும் உயர்நிலைப்பள்ளி போன்ற அனைத்திற்கும் கற்பிக்கும் முறை ஆன்லைனில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : குவைத்தில் காலாவதியான குடியிருப்புடன் உள்ளவர்களுக்கு ஒரு நாளைக்கு 2 KD அபராதம்..!!

ஆன்லைனில் கற்பிப்பதற்கு ஒருங்கிணைந்த திட்டத்தை கல்வித்துறை உருவாக்கியுள்ளது என்பதையும் அமைச்சர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

மேலும், வழக்கமான முறையிலிருந்து ஆன்லைனில் கற்பிப்பதற்கு எளிமையாக இல்லை என்றும், அதற்கு முக்கிய தயாரிப்பு மற்றும் உள்கட்டமைப்பு தேவை என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க : குவைத்தில் தற்போது 95 சதவீதம் குடிமக்கள் அரசு வேளைகளில் உள்ளனர்..!!

குவைத்தில் கொரோனா காலகட்டத்திற்கு முன்னதாகவே இந்த ஆன்லைனில் கற்பிக்கும் முறை நிறுவப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கடந்த ஆண்டு இறுதியில் சீனாவிலிருந்து தொற்றுநோய் வந்து பின்னர், குவைத் உள்ளிட்ட உலக முழுவதும் உள்ள நாடுகளுக்கு பரவியதால் ஆன்லைன் கல்விக்கு மாறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : குவைத்தின் சபா அல்-அஹ்மத் பகுதியில் புதிதாக இரண்டு சுகாதார மையங்களை சுகாதார அமைச்சர் திறந்து வைத்தார்..!!

குவைத் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

👉Facebook

👉 Twitter