மாணவர்களுக்கு COVID-19 தடுப்பூசி கிடைக்கும் வரை ஆன்லைனில் பரீட்சை நடத்தபட வேண்டும் – MOH

Kuwait online exam
Photo Credit : Bloomberg

குவைத்தில் மாணவர்கள் COVID-19 தடுப்பூசி கிடைக்கும் வரை ஆன்லைனில் பரீட்சை நடத்த வேண்டும்.

கொரோனா வைரஸைத் தடுக்க நாடு போராடி வருவதால், காகித முறையில் பரிட்சைகளை நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்ருந்தது.

இதையும் படிங்க : குவைத்தில் கொரோனா காலகட்டத்தில் பணிப்பெண்களை துன்புறுத்துதல் அதிகரிப்பு..!!

மேலும், இந்த கல்வி அமைச்சகத்தின் கோரிக்கையை குவைத் சுகாதார அதிகாரிகள் நிராகரித்ததாக உள்ளூர் செய்தித்தாள் செய்தி வெளியிட்டுள்ளது.

கொரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பூசிகள் கிடைக்கும் வரை அனைத்து கல்வி மட்டங்களிலும் அனைத்து சோதனைகளும் ஆன்லைனில் நடத்தப்பட வேண்டும்.

இந்த தகவலை சுகாதார அமைச்சகத்தின் துணை செயலாளர் டாக்டர் முஸ்தபா ரெடா தெரிவித்தார்.

கொரோனா வைரஸின் பரவல் மற்றும் அதன் விளைவுகள் மற்றும் அபாயங்களைக் கட்டுப்படுத்துவதற்கான ஒருங்கிணைந்த முயற்சிகள் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது.

தற்போதைய காலகட்டத்தில் அனைத்து கல்வி மட்டங்களிலும் உள்ள அனைத்து மாணவர்களுக்கும் பரீட்சைகள் ஆன்லைனில் நடத்தப்பட வேண்டும் என்று சுகாதார அமைச்சகம் கருதுகிறது.

மேலும், நாட்டில் சுகாதார நிலைமை நிலையானதாக இருக்கும் வரை மற்றும் COVID-19 க்கு எதிராக தேவையான தடுப்பூசிகள் கிடைக்கும் வரை இது தொடரும்.

மருந்து தயாரிப்பாளரான Pfizer மற்றும் பயோடெக்னாலஜி நிறுவனமான BioNtech தயாரித்த தடுப்பூசி 90 சதவீதத்திற்கும் அதிகமான செயல்திறன் மிக்கதாக நிரூபிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து, குவைத்தின் சுகாதார அமைச்சகம் சுமார் 1 மில்லியன் தடுப்பூசிகளை ஆர்டர் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : குவைத்தில் சுகாதார விதிமுறைகளுக்கு கட்டுப்படாதவர்களுக்கு உடனடியாக கைது..!!

குவைத் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

👉Facebook

👉 Twitter