குவைத்தின் புதிய மகுட இளவரசர் பற்றிய சிறு குறிப்பு..!!

Kuwait New Deputy Amir
New Deputy amir of Kuwait. (Photo : KUNA)

குவைத்தின் அமீர் ஷேக் நவாப் அல் அஹ்மத் அல் சபா அவர்கள் தன்னுடைய மகுட இளவரசராக ஷேக் மிஷால் அல் அஹ்மத் அல் சபா அவர்களை பரிந்துரைத்துள்ளார்.

ஷேக் மிஷால் அல் அஹ்மத் அல் சபா அவர்களின் வாக்கெடுப்பு தேசிய சட்டமன்றத்தில் பரிந்துரை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : குவைத்தில் காலாவதியான குடியிருப்புடன் உள்ளவர்களுக்கு ஒரு நாளைக்கு 2 KD அபராதம்..!!

மேலும், 80 வயதான ஷேக் மிஷால் அல் அஹ்மத் அல் சபா அவர்கள் 1921 முதல் 1950ஆம் ஆண்டு வரை ஆட்சி செய்த அல் சபா வம்சத்தைச் சேர்ந்த 10 வது ஆட்சியாளரான ஷேக் அஹ்மத் அல் ஜாபர் அல் சபாவின் ஏழாவது மகனாவார்.

ஷேக் மிஷால் அவர்கள் 1960ஆம் ஆண்டு லண்டனில் அமைந்துள்ள ஹென்டன் காவல் கல்லூரியில் பட்டம் பெற்றவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அவர் தேசிய காவல்படையில் துணைத் தலைவராக பணியாற்றுவதற்கு முன்பு, 2004 ஆம் ஆண்டு உள்துறை அமைச்சகத்தில் பல பதவிகளில் பணியாற்றியுள்ளார்.

இதையும் படிங்க : குவைத்தில் தற்போது 95 சதவீதம் குடிமக்கள் அரசு வேளைகளில் உள்ளனர்..!!

புதிய அமீர் ஷேக் நவாப் அல் அகமது அல் சபா அவர்களை போல, ஷேக் மிஷால் அவர்கள் குவைத் மற்றும் பிற அரபு நாடுகளின் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு நிலையை மேம்படுத்துவதில் தீவிரமாக செயல்படுகிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குவைத்தின் அரசியல் அமைப்பின்படி ஒரு அமீர் பதவியேற்றதிலிருந்து ஒரு வருடத்திற்குள் மகுட இளவரசரை பரிந்துரைக்க வேண்டும் என்று இருந்தாலும், அமீர் ஷேக் நவாஃப் அவர்கள் ஒரு வாரத்திற்குள் தனது மகுட இளவரசரை பரிந்துரைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : குவைத்தின் சபா அல்-அஹ்மத் பகுதியில் புதிதாக இரண்டு சுகாதார மையங்களை சுகாதார அமைச்சர் திறந்து வைத்தார்..!!

குவைத் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

👉Facebook

👉 Twitter

Related posts

குவைத்தின் PACI வரும் ஞாயிற்றுக்கிழமை முதல் கிடைக்கும் அதன் சேவைகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது..!!

Editor

COVID-19; குவைத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 665ஆக உயர்வு..!!

Editor

குவைத்தில் சிவில் ஐடிகளை வழங்க இரண்டு சிறப்பு அரங்குகளைத் திறக்கிறது PACI..!!

Editor