குவைத் நாடாளுமன்ற கடைசி அமர்வில் பேசிய புதிய அமீரின் உரை..!!

Kuwait National Assembly
Photo Credit : TimesKuwait

குவைத் நாடாளுமன்றத்தில் புதிய அமீர் ஷேக்-நவாஃப்-அல்-அஹ்மத் அல்-சபா அவர்கள் உறுப்பினர்கள் மத்தியில் தனது உரையை இன்று (அக்டோபர் 20) நிகழ்த்தினார்.

16-வது நாடாளுமன்றத் தேர்தலை டிசம்பர் 5-ஆம் தேதி நடத்த அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது என்று அரசாங்கத்தின் செய்தித் தொடர்பாளர் தாரிக்-அல்-முசாரம் நேற்று அறிவித்தார்.

இதையும் படிங்க : குவைத்தில் காலாவதியான குடியிருப்புடன் உள்ளவர்களுக்கு ஒரு நாளைக்கு 2 KD அபராதம்..!!

தற்போது, நேற்று செவ்வாய்க்கிழமை பதவியில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களின் கடைசி அமர்வு கூட்டப்பட்டது.

இந்த கூட்டத்தின் போது அமீர் மறைவையொட்டி புதிதாக பதவியேற்ற அமீர் ஷேக் நவாப் அல் அஹ்மத் அல் சபா உரையாற்றினார்.

புதிய அமீராக பதவியேற்ற பின்னர் அரசு சார்பில் நடத்திய முதல் அதிகாரபூர்வ உரை இதுவாகும்.

உரையில் வளைகுடா நாடு எதிர்கொள்ளும் சவால்களை வெற்றிகரமாக சமாளிக்க தேசிய ஒற்றுமைக்கு அழைப்பு விடுத்தார்.

மேலும் சவால்கள், ஆபத்துகள் மற்றும் நெருக்கடிகளை எதிர்கொள்வதில் தேசிய ஒற்றுமையே எங்கள் வலுவான ஆயுதம் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது என்று புதிய அமீர் கூறினார்.

இதுபோல் பிரதம மந்திரி ஷேக் சபா அல்-காலித் அல்-சபா, ஒரு துணை சட்டமன்றக் கூட்டத் தொடரின் தொடக்கத்திலும் உரையாற்றினார்.

வரவுசெலவுத் திட்டத்திற்கு நிதியளிப்பதற்கு அரசாங்கம் இன்னும் நிலையான கருவிகளை நாடுகிறது, இதில் 2020-2021 நிதியாண்டிற்கான செலவினங்களில் 71% பொதுத்துறை சம்பளம் மற்றும் மானியங்கள் ஆகும்.

இதையும் படிங்க : குவைத்தில் தற்போது 95 சதவீதம் குடிமக்கள் அரசு வேளைகளில் உள்ளனர்..!!

குவைத் எண்ணெய் மற்றும் முதலீட்டுக் கொள்கையையும் அரபு ஒற்றுமைக்காக பாடுபடும் ஒரு சீரான வெளியுறவுக் கொள்கையையும் பராமரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சவுதி அரேபியாவும் அதன் நட்பு நாடுகளும் 2017 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் இருந்து கத்தார் புறக்கணிப்பதைக் கண்ட வளைகுடா சர்ச்சையை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான முயற்சிகளை குவைத் தொடரும் என்று பிரதமர் தனது உரையில் தெரிவித்தார்.

இதையும் படிங்க : குவைத்தின் சபா அல்-அஹ்மத் பகுதியில் புதிதாக இரண்டு சுகாதார மையங்களை சுகாதார அமைச்சர் திறந்து வைத்தார்..!!

குவைத் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

👉Facebook

👉 Twitter