குவைத்தில் கர்பிணி மனைவியை கொலை செய்த கணவருக்கு மரண தண்டனை..!!

Kuwait Murdering pregnant wife
Kuwaiti sentenced to death for murdering pregnant Saudi wife. (Photo : TimesKuwait)

குவைத்தில் கர்ப்பிணியான மனைவியை கொலை செய்ததற்காக கணவருக்கு குவைத் அரசு மரண தண்டனை விதித்துள்ளது.

குவைத்தின் வடமேற்கில் அமைந்துள்ள அல் ஜஹ்ரா என்ற மாகாணத்தில், 31 வயதான ஒரு நபர் 25 வயதான தனது சவூதி மனைவியுடன் வாழ்ந்து வந்துள்ளார்.

இதையும் படிங்க : குவைத்தில் காலாவதியான குடியிருப்புடன் உள்ளவர்களுக்கு ஒரு நாளைக்கு 2 KD அபராதம்..!!

இதனை தொடர்ந்து, மூன்று ஆண்டுகளுக்கு முன் இந்த தம்பதியினருக்குள் ஏற்ப்பட்ட தனிப்பட்ட சண்டையின் காரணமாக கர்ப்பிணியாக உள்ள தனது மனைவியை கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார்.

மேலும், கொலை செய்த அந்த நபர் குவைத் அதிகாரிகளிடம் சரணடைந்துள்ளார் என்று சவுதியின் ஒகாஸ் செய்தித்தாள் தெரிவித்துள்ளது.

காவல்துறை குற்றம் நடந்த இடத்திற்கு வந்த பின்னர், பாதிக்கப்பட்டவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : குவைத்தில் தற்போது 95 சதவீதம் குடிமக்கள் அரசு வேளைகளில் உள்ளனர்..!!

காவல்துறை விசாரணையில், குற்றம் நடந்த நேரத்தில் கொலை செய்தவர் போதையில் இருந்தார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து, கொலை செய்த வழக்கில் கீழ் நீதிமன்றத்தின் தீர்ப்பையேற்று குவைத்தின் உயர் நீதிமன்றம் திங்களன்று மரண தண்டனையை உறுதிசெய்தது என்று சவுதி அரேபியாவின் ஒகாஸ் செய்தித்தாள் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : குவைத்தின் சபா அல்-அஹ்மத் பகுதியில் புதிதாக இரண்டு சுகாதார மையங்களை சுகாதார அமைச்சர் திறந்து வைத்தார்..!!

குவைத் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

👉Facebook

👉 Twitter

Related posts

குவைத்தில் முழு ஊரடங்கில் உள்ள Khaitan பகுதியில் இழப்புக்கள் மற்றும் குறைந்த வருவாய்களால் உணவக உரிமையாளர்கள் தவிப்பு..!!

Editor

குவைத்தில் COVID-19 பரவலுக்கு முக்கிய பகுதியாக இருந்த Mahboula-வில் கடந்த இரண்டு வாரங்களாக யாரும் பாதிக்கப்படவில்லை- MOH

Editor

Jleeb Al-Shuyoukh, Mahboula பகுதிகளைத் தொடர்ந்து ஃபர்வானியாவில் முழு ஊரடங்கு உத்தரவு – குவைத் அரசு

Editor