குவைத்தில் இன்றிலிருந்து (24.04.2020) புதிய ஊரடங்கு உத்தரவு நேரங்கள் கடைப்பிடிக்கவேண்டும் – உள்துறை அமைச்சகம்

kuwait MOI urges public to abide by new curfew hours from 4:00 p.m. until 8:00 a.m. .

குவைத் உள்துறை அமைச்சகம் குடிமக்கள் மற்றும் வெளிநாட்டவர்களுக்கு புதிய ஊரடங்கு உத்தரவு நேரங்களை கடைப்பிடிக்குமாறு அழைப்பு விடுத்துள்ளது.

மேலும், இது ரமலான் மாதத்தின் முதல் நாளான இன்று (24.04.2020) வெள்ளிக்கிழமை முதல் அமலுக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய ஊரடங்கு மாலை 4:00 மணி முதல் காலை 8:00 மணி வரை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் முயற்சிகளின் ஒரு பகுதியாக ஊரடங்கு உத்தரவு விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.