தடை விதிக்கப்பட்டுள்ள நாடுகளிலிருந்து நேரடியாக நுழைய விமான நிறுவனங்களுடன் சுகாதார அமைச்சர் பேச்சுவார்த்தை..!!

Kuwait Banned Countries MOH
Photo credit : IIK

குவைத்தின் சுகாதார அமைச்சர் ஷேக் டாக்டர். பசில் அல்-சபா அவர்கள் இன்று (அக்டோபர் 22) வியாழக்கிழமை குவைத் ஏர்வேஸ் மற்றும் ஜசீரா ஏர்வேஸ் பிரதிநிதிகளை சந்திக்கவுள்ளார்.

குவைத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் 34 நாடுகளுக்கு விமான சேவையை நிறுத்தி வைத்துள்ளது.

இதையும் படிங்க : குவைத்தில் காலாவதியான குடியிருப்புடன் உள்ளவர்களுக்கு ஒரு நாளைக்கு 2 KD அபராதம்..!!

இந்நிலையில், தடைசெய்யப்பட்ட 34 நாடுகளிலிருந்து நேரடி விமானத்தைத் தொடங்க இரு நிறுவனங்களும் பேச்சு வார்த்தை நடத்துகிறது என்று அல்-கபாஸ் செய்தி தெரிவித்துள்ளது.

இந்த திட்டத்தில் 34 நாடுகளை அதிக மற்றும் குறைந்த ஆபத்துள்ள நாடுகளாக பிரிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அதிக ஆபத்துள்ள நாடுகளில் இருந்து வரும் பயணிகள் மீது மூன்று PCR சோதனைகள் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து, பயணிகள் நாட்டிலிருந்து புறப்படுவதற்கு முன்பு, தனிமைப்படுத்தப்பட்ட காலத்தின் இறுதியில் மற்றும் வருகைக்கு முன்பு PCR சோதனைகள் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறைந்த ஆபத்துள்ள நாட்டிலிருந்து வரும் பயணிகள் புறப்படுவதற்கு முன்பும் மற்றும் வருகைக்கு முன்பும் இரண்டு PCR சோதனை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : குவைத்தில் தற்போது 95 சதவீதம் குடிமக்கள் அரசு வேளைகளில் உள்ளனர்..!!

மேலும், இவ்வனைத்தும் பயணிகளின் செலவில் PCR சோதனை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சகம் அங்கீகரித்தால் இந்த திட்டத்தை அமல்படுத்தலாம் என்று சிவில் ஏவியேஷனின் பொது நிர்வாகம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : குவைத்தின் சபா அல்-அஹ்மத் பகுதியில் புதிதாக இரண்டு சுகாதார மையங்களை சுகாதார அமைச்சர் திறந்து வைத்தார்..!!

குவைத் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

👉Facebook

👉 Twitter