குவைத்தில் உள்ள மாணவர்கள் இரண்டாம் செமஸ்டரின் போது பள்ளிக்கு திரும்பலாம் – MOE

Kuwait MOE students
Photo Credit : AP

குவைத் கல்வி அமைச்சகத்தின் செயல் துணை செயலாளர் பைசல் அல் மக்ஸித், இரண்டாம் செமஸ்டர் தொடக்கத்தில் மாணவர்கள் பள்ளிக்கு திரும்புவதற்கான வாய்ப்பு உள்ளது என்று அறிவித்ததாக அல் ஜரிடா தெரிவித்துள்ளது.

பொது கல்வி உதவி துணை செயலாளர் ஒசாமா அல் சுல்தான் மற்றும் பள்ளி இயக்குநர்கள் கலந்து கொண்ட ஒரு கூட்டத்தின் போது அவரது இந்த அறிவிப்பு வந்துள்ளது.

இதையும் படிங்க : குவைத்தில் கொரோனா காலகட்டத்தில் பணிப்பெண்களை துன்புறுத்துதல் அதிகரிப்பு..!!

மேலும், அங்கு அவர்கள் கல்வி தொடர்பான பல்வேறு தலைப்புகளில் விவாதித்தனர்.

கூட்டத்தில், அல் மக்ஸித் மாணவர்கள் பள்ளிகளுக்குத் திரும்புவதற்கான படிப்படியான திட்டத்தை உருவாக்குவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.

மேலும், இது சுகாதார அதிகாரிகளின் ஒப்புதலுக்குப் பிறகுதான் நடைபெற முடியும் என்றும் தெரிவித்தார்.

அல் மக்ஸீத்தின் மேற்பார்வையின் கீழ் ஒரு மினி கமிட்டியை உருவாக்கும் பணியில் அல் சுல்தான் பணிக்கப்பட்டார்.

அங்கு அவர்கள் ஒரு விரிவான திட்டத்தை வகுத்து, அடுத்த வாரம் தொடக்கத்தில் ஒரு கூட்டத்தில் விவாதிக்கப்படும் ஒரு திட்டத்தை உருவாக்குவார்கள்.

COVID-19 வைரஸ் பரவுவதைத் தடுக்கும் முயற்சியாக அனைத்து பள்ளிகளும் மின் கற்றலை (e learning) நடத்தப்போவதாக கல்வி அமைச்சர் டாக்டர் சவுத் அல் ஹர்பி செப்டம்பர் மாதம் மீண்டும் அறிவித்தார்.

இதையும் படிங்க : குவைத்தில் சுகாதார விதிமுறைகளுக்கு கட்டுப்படாதவர்களுக்கு உடனடியாக கைது..!!

குவைத் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

👉Facebook

👉 Twitter