குவைத்தில் பணிச்சுமை காரணமாக வீட்டு வேலைக்காரர்கள் மற்றும் ஓட்டுநர்கள் தப்பிஓடுதல் அதிகரிப்பு..!!

Kuwait Maids Absconding
Increase in Maids & Drivers running away from their sponsors. (Photo : TimesKuwait)

குவைத்தில் அமைந்துள்ள வீடுகளில் இருக்கும் வீட்டு வேலைக்காரர்கள் மற்றும் ஓட்டுநர்களை அதிக வேலை வாங்குவதால் வீட்டைவிட்டு வெளியேறும் நிலை அதிகரித்துள்ளது.

குவைத்தில் வசிக்கின்ற குடும்பங்களுக்கு வீட்டு வேலைக்காரர்கள் இருந்த நிலையில் தற்போது அவர்களை அதிகமான வேலை வாங்குவதால் வீட்டைவிட்டு வெளியேறுவதன் காரணமாக பற்றாக்குறை ஏற்ப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : குவைத்தில் காலாவதியான குடியிருப்புடன் உள்ளவர்களுக்கு ஒரு நாளைக்கு 2 KD அபராதம்..!!

குறிப்பாக, பகுதி மற்றும் முழுநேர ஊரடங்கு உத்தரவுக்குப் பிறகு வீட்டில் உள்ளவர்கள் நாள் முழுவதும் அதிகமான வேலை வாங்குவதால் வெளியேறும் நிலை ஏற்ப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும், தங்களது ஆதரவாளர்களால் (Sponsor) கையொப்பம் செய்யப்பட்ட வேலை அனுமதிகளை காலாவதியாகிவிட்டது என்று தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க : குவைத்தில் தற்போது 95 சதவீதம் குடிமக்கள் அரசு வேளைகளில் உள்ளனர்..!!

இந்தியா, பிலிப்பைன்ஸ், இலங்கை மற்றும் நேபாளம் போன்ற நாடுகளில் இருந்து விமான சேவையை மீண்டும் தொடங்காததால் பணியாளர் சேர்ப்பை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், வீட்டு வேலைக்காரர்கள் மற்றும் ஓட்டுநர்கள் குவைத்தின் அடித்தளமாக கருதுகின்றனர் என்று தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : குவைத்தின் சபா அல்-அஹ்மத் பகுதியில் புதிதாக இரண்டு சுகாதார மையங்களை சுகாதார அமைச்சர் திறந்து வைத்தார்..!!

குவைத் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

👉Facebook

👉 Twitter