நாட்டின் முதல் COVID-19 தடுப்பூசியை போட்டுக் கொண்ட குவைத் பிரதமர்!

Kuwait launches vaccinations COVID-19
Kuwaiti Prime Minister Sheikh Sabah Al Khalid Al Sabah takes the vaccine (Photo: Courtesy of Al Anba)

குவைத் பிரதமர் ஷேக் சபா அல் காலித் அல் சபா இன்று COVID-19க்கு எதிராக தடுப்பூசி இயக்கத்தை தொடங்கினார்.

மேலும், நாட்டில் முதல் தடுப்பூசியை அவர் போட்டுக் கொண்டார்.

அனைவருக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்து கூறி இனிப்பு வழங்கிய குவைத் இந்திய தூதரகம்!

சுமார் 150,000 அளவுகளைக் கொண்ட Pfizer-BioNTech தடுப்பூசி மருந்தின் முதல் தொகுதி இந்த வார தொடக்கத்தில் குவைத் வந்தடைந்தது.

இந்த தடுப்பூசி மருந்துகள் பாதுகாப்பானது மற்றும் சர்வதேச நிறுவனங்களால் அங்கீகரிக்கப்பட்டுள்ளதாக அல் காலித் கூறினார்.

கொரோனா வைரஸ் காரணமாக முழு உலகமும் பல, பெரிய சூழல்களை அனுபவித்து வருகின்றன. இந்த தடுப்பூசி அதற்கான ஒரே தீர்வை வழங்குகிறது என்று அவர் குவைத் தடுப்பூசி மைய ஊடகங்களில் தெரிவித்தார்.

இயல்பு நிலைக்கு வாழ்க்கை மீண்டு வர உதவும் சுகாதார நடவடிக்கைகளுக்கு மக்கள் கட்டுப்பட வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

COVID-19 காரணமாக வெளிநாட்டில் இவர்களின் ஒப்பந்தத்தை நிறுத்திய குவைத்!

குவைத் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

👉Facebook

👉 Twitter