குவைத்தில் இந்திய செவிலியர் ஒருவர் புற்றுநோய் காரணமாக மரணம்..!!

Kuwait Indian Nurse died
Photo Credit : istock

குவைத்தில் செவிலியராக பணிபுரிந்து வந்த இந்தியாவை சேர்ந்த பெண் ஒருவர் புற்றுநோய் காரணமாக காலமானார்.

இவர் இந்தியாவில் உள்ள கேரளா மாநிலம் பதானம்திட்டா பகுதியை சேர்ந்தவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : சவுதி அரேபியாவுக்கான விமானங்களை மீண்டும் தொடங்கவுள்ளதாக குவைத் ஏர்வேஸ் அறிவிப்பு..!!

இவரது பெயர் மரியம்மா உம்மன் வயது 50, கணவனின் பெயர் ஆபிரகாம் வர்கீஸ் ஆவார்.

குவைத்தில் உள்ள புற்றுநோய் சிகிச்சை மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் நேற்று (அக்டோபர் 26) திங்கட்கிழமை அன்று காலமானார்.

இவர் கடந்த சில நாட்களாக இந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார் என்று கூறப்படுகிறது.

இவர் குவைத்தின் சபா மருத்துவமனையில் குழந்தை பிரிவில் செவிலியராக பணிபுரிந்து வந்தார்.

இந்நிலையில் இவருக்கு புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இவரது உடலை இந்தியாவிற்கு திருப்பி அனுப்பும் பணிகள் ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றன.

இதையும் படிங்க : குவைத்தில் கொரோனா காலகட்டத்தில் பணிப்பெண்களை துன்புறுத்துதல் அதிகரிப்பு..!!

மேலும், இவர்களக்கு ஆலன் மற்றும் ஆண்ட்ரியா என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

இவர்கள் இருவரும் குவைத் இந்தியன் சென்ட்ரல் பள்ளி மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : குவைத்தில் சுகாதார விதிமுறைகளுக்கு கட்டுப்படாதவர்களுக்கு உடனடியாக கைது..!!

குவைத் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

👉Facebook

👉 Twitter

Related posts

வெளிநாட்டவர்கள் குவைத் திரும்ப மூன்று கட்டங்களாக அனுமதிக்க உள்துறை அமைச்சகம் பரிந்துரை..!!

Editor

COVID-19; குவைத்தில் 2 பேர் மரணம் மற்றும் புதிதாக 80 பேர் பாதிப்பு..!!

Editor

வந்தே பாரத் திட்டத்தின் கீழ் வரும் நாட்களில் இந்தியாவிற்கு வரவிற்கும் விமானங்களின் அட்டவணை..!!

Editor