குவைத்தில் இருந்து இந்தியா திரும்ப விரும்பும் இந்தியரகள் தூதரகத்தில் பதிவு செய்ய வலியுறுத்தல்..!!

Kuwait Indian Embassy
Photo Credit : IIK

குவைத்தில் இருந்து இந்தியா செல்ல விரும்புவார்கள் குவைத் இந்திய தூதரகத்தில் பதிவு செய்யுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

குவைத்தில் இருந்து இந்தியா செல்ல விரும்பும் இந்தியர்கள் இந்திய தூதரகத்தில் மீண்டும் பதிவு செய்ய வேண்டும் என்று அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : குவைத்தில் கொரோனா காலகட்டத்தில் பணிப்பெண்களை துன்புறுத்துதல் அதிகரிப்பு..!!

இந்தியா செல்ல விரும்பும் இந்தியர்களின் எண்ணிக்கையை சரியான முறையில் கணக்கிட இந்த பதிவு செய்யும் முறை அறிவிக்கப்பட்டுள்ளது.

பெயரையும், ஊரையும் பதிவு செய்த பின் அதற்கு ஏற்றவாறு விமானங்கள் ஏற்பாடு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், முன்னதாக பதிவு செய்த செய்யமுறைக்கும் இந்த முறை பதிவு செய்வதற்கும் எந்த மாற்றமும் இல்லை என்று தூதரகம் விளக்கமளித்துள்ளது.

இதற்கு முன்னதாக பதிவு செய்து புறப்படாமல் இருந்தாலும் பதிவு செய்யுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்த link-ஐ https://forms.gle/R12a8XDxYXfroXUaA பயன்படுத்தி தங்களை பதிவு செய்யுமாறு தூதரகம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : குவைத்தில் சுகாதார விதிமுறைகளுக்கு கட்டுப்படாதவர்களுக்கு உடனடியாக கைது..!!

குவைத் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

👉Facebook

👉 Twitter