குவைத்தில் உள்ள இந்தியர்கள் தங்கள் பிரச்சனைகளை MADAD செயலியில் பதிவு செய்யலாம்..!!

Kuwait Indian Embassy MADAD
Embassy advises Indians to use MADAD platform to register their issues and concerns. (Photo : TimesKuwait)

குவைத்தில் வசிக்கும் இந்திய மக்கள் தங்களது பிரச்சனைகளை MADAD செயலியில் பதிவு செய்யலாம் என்று குவைத் இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.

மேலும், தூதரகத்தை அணுகும் அனைவரும் தங்கள் குறைகள் மற்றும் பரிந்துரைகளை பதிவு செய்ய MADAD செயலியை பயன்படுத்துங்கள் என்று அறிவுறுத்தியுள்ளது.

இதையும் படிங்க : குவைத்தில் காலாவதியான குடியிருப்புடன் உள்ளவர்களுக்கு ஒரு நாளைக்கு 2 KD அபராதம்..!!

MADAD என்பது ஒரு தூதரக சேவை மேலாண்மை அமைப்பு, இது வெளிவிவகார அமைச்சகத்தினால் தொடங்கப்பட்டது.

வெளிநாடுகளில் அமைந்துள்ள இந்திய தூதரகங்கள் பணிகள் மற்றும் பதிவுகளை வழங்கும் தூதரக சேவை தொடர்பான குறைகளை இந்திய குடிமக்கள் பதிவுசெய்து கண்காணிக்க 2015ஆம் ஆண்டு இந்திய அரசு தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதனை தொடர்ந்து, நீதிமன்ற வழக்குகள், உள்நாட்டு உதவிகள், ஊழியரை திருப்பி அனுப்புவது, சம்பள நிலுவைத் தொகை, காணாமல் போனவர்களை கண்டறிவது மற்றும் சமூக நல பிரச்சனைகளை இந்த MADAD செயலி மூலம் பதிவு செய்துகொள்ளலாம்.

இதையும் படிங்க : குவைத்தில் தற்போது 95 சதவீதம் குடிமக்கள் அரசு வேளைகளில் உள்ளனர்..!!

மேலும், MADAD செயலி ஆன்லைன் பதிவிற்காகவும் மற்றும் குறைகளை கண்காணிக்கவும் பயன்படுகிறது என்று தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த MADAD செயலியை http://www.madad.gov.in/ என்ற வலைத்தளம் மூலம் அணுகலாம்.

இதையும் படிங்க : குவைத்தின் சபா அல்-அஹ்மத் பகுதியில் புதிதாக இரண்டு சுகாதார மையங்களை சுகாதார அமைச்சர் திறந்து வைத்தார்..!!

குவைத் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

👉Facebook

👉 Twitter