இந்தியாவில் இருந்து குவைத் செல்லும் பயணிகள் கவனத்திற்கு..!

Kuwait-India travel passengers
(PHOTO: Reuters)

குவைத் நாட்டிற்கு பயணிக்கும் அனைத்து பயணிகளும் வைரஸ் பாதிப்பு இல்லை என்ற சோதனை Negative சான்றிதழை வைத்திருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது ஜனவரி 17 முதல் அது நடப்பில் வருவதாக ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

குவைத்தில் 20,000க்கும் மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது!

வைரஸ்க்கான சோதனை மேற்கொள்ளப்பட்ட நேரம் முதல் விமான நிலையத்தில் அதனை ஏற்றுக் கொள்ளும் நேரம் வரை, 72 மணி நேரத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய நகரங்களுக்கு இயக்கப்படும் விமானங்கள்:

குவைத்திலிருந்து ஒவ்வொரு வியாழக்கிழமையும் திருச்சிக்கு விமானங்கள் இயங்கும் என்று ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் தெரிவித்துள்ளது.

  • விஜயவாடா       – புதன் மற்றும் சனிக்கிழமை
  • ஹைதராபாத்   – சனிக்கிழமை
  • மங்களூர்            – திங்கள்கிழமை
  • கோழிக்கோடு  – செவ்வாய் மற்றும் ஞாயிறு
  • கண்ணூர்            – வெள்ளிக்கிழமை
  • கொச்சி                – புதன் மற்றும் ஞாயிறு

குவைத் நாட்டிற்குள் சட்டவிரோதமாக நுழைந்த 10 வெளிநாட்டினர் கைது