இந்தியா முழுவதும் நாளை மறைந்த குவைத் அமீருக்கு அஞ்சலி..!!

Indians living in Kuwait urged to join the state mourning in India on 4 October
Indians living in Kuwait urged to join the state mourning in India on 4 October. (Photo : TimesKuwait)

குவைத்தின் மறைந்த அமீர் ஷேக் சபா அல்-அஹ்மத் அல்-ஜாபர் அல்-சபா அவர்கள் செப்டம்பர் 29, 2020 அன்று காலமானார்.

இதனை தொடர்ந்து, நாளை மறைந்த அமீருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக (அக்டோபர் 04) இந்தியா தேசிய துக்க தினமாக அறிவித்துள்ளது.

இந்திய முழுவதும் மற்றும் இந்திய உயர் கமிஷன்கள், தூதரகங்கள், வெளிநாடுகளில் உள்ள தூதரகங்கள் உள்ளிட்ட அனைத்திலும் துக்கநாள் அனுசரிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : குவைத்தில் காலாவதியான குடியிருப்புடன் உள்ளவர்களுக்கு ஒரு நாளைக்கு 2 KD அபராதம்..!!

மேலும், இந்தியா முழுவதும் உள்ள அனைத்து இந்திய அரசு கட்டிடங்களிலும், உயர் கமிஷன்கள், வெளிநாடுகளில் உள்ள தூதரங்களில் இந்திய தேசிய கொடி அரை கம்பத்தில் பறக்கவிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்து அதிகாரபூர்வ பொழுதுபோக்கு நடவடிக்கைகளும் அக்டோபர் 04, 2020 அன்று ரத்து செய்யப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : குவைத்தில் தற்போது 95 சதவீதம் குடிமக்கள் அரசு வேளைகளில் உள்ளனர்..!!

குவைத்தில் உள்ள இந்திய தூதரகத்தில் (அக்டோபர் 04) 2020 இந்திய தேசிய கொடி அரை கம்பத்தில் பறக்கவிடப்படும் என்றும் குவைத்தில் உள்ள இந்திய நாட்டினர் மற்றும் இந்திய பொதுத்துறை நிறுவனங்கள் அக்டோபர் 04 காலை 11 மணிக்கு இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்தியாவில் உள்ள 1.3 பில்லியன் சகோதர சகோதரிகள் இந்த துக்கநாளில் கலந்து கொண்டு மறைந்த அமீருக்கு அஞ்சலி செலுத்துமாறு அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : குவைத்தின் சபா அல்-அஹ்மத் பகுதியில் புதிதாக இரண்டு சுகாதார மையங்களை சுகாதார அமைச்சர் திறந்து வைத்தார்..!!

குவைத் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

👉Facebook

👉 Twitter