குவைத்தில் சுகாதார விதிகளை கடைபிடிக்க தவறுபவர்களை கையாள Lt.ஃபத்தா அலி நியமனம்..!!

Kuwait health requirement violators
Lt Gen Abdul Fatah Ali. (Photo credit : IIK)

குவைத்தில் கொரோனா வைரஸ் பரவல் மீண்டும் அதிகரித்து வரும் நிலையில் பரவாமல் தடுப்பதற்காக சுகாதார தடுப்பு நடவடிக்கைகளை கடுமையாக அமல்படுத்துவதற்காக அமைச்சரவை கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.

இதற்காக உள்துறை அமைச்சகத்தின் முன்னாள் உதவி செயலாளரும் உள்துறை அமைச்சரின் ஆலோசகருமான லெப்டினன்ட் ஜெனரல் அப்துல் ஃபத்தா அலி சேர்க்க அமைச்சரவை நேற்று (அக்டோபர் 12) முடிவு செய்தது.

இதையும் படிங்க : குவைத்தில் காலாவதியான குடியிருப்புடன் உள்ளவர்களுக்கு ஒரு நாளைக்கு 2 KD அபராதம்..!!

கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்கு எடுக்கப்படும் நடவடிக்கைகள் கையாள்வது குறித்து சுகாதார அமைச்சகம் வழங்கிய வழிகாட்டுதல்களைச் செயல்படுத்தவும், அதன் செயல்படுத்தும் முறைகளை விரிவுபடுத்தவும், அதை கடுமையாக அமுல்படுத்தவும் அமைச்சரவை குழு கேட்டுக்கொண்டது.

லெப்டினன்ட் ஜெனரல் அப்துல் ஃபத்தா அலி அவர்கள் சட்ட ஒழுங்கை கையாள்வதில் சிறந்தவர் என்று கருதப்படுபவராவார்.

இதையும் படிங்க : குவைத்தில் தற்போது 95 சதவீதம் குடிமக்கள் அரசு வேளைகளில் உள்ளனர்..!!

இவர் முன்னதாக குவைத்தில் போக்குவரத்து துறையில் சேவையாற்றிய நேரத்தில் விதிகளை மீறும் குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவரை கொரோனா தடுப்பு நடவடிக்கை குழுவில் சேர்ப்பதன் மூலம், கொரோனா தடுப்பு சட்டத்தை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் வரும் நாட்களில் எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க : குவைத்தின் சபா அல்-அஹ்மத் பகுதியில் புதிதாக இரண்டு சுகாதார மையங்களை சுகாதார அமைச்சர் திறந்து வைத்தார்..!!

குவைத் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

👉Facebook

👉 Twitter