குவைத்தில் COVID-19 இறப்புகள் நாளுக்கு நாள் அதிகரிப்பு; இன்று இது குறித்த முக்கிய சுகாதார கூட்டம்..!!

Kuwait Kuwait health committee meeting
Kuwait health committee meeting today. (Photo : Arab Times)

குவைத்தில் கொரோனா வைரஸ் (COVID-19) கிருமித்தொற்று இறப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

ICUவில் இறப்புகள் மற்றும் பாதித்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாக சுகாதார அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.

இதையும் படிங்க : குவைத்தில் காலாவதியான குடியிருப்புடன் உள்ளவர்களுக்கு ஒரு நாளைக்கு 2 KD அபராதம்..!!

இதனை தொடர்ந்து, தொற்றுநோய் குறித்து அடுத்த கட்ட நடவடிக்கை முடிவு செய்ய சுகாதாரக் குழுவின் முக்கியமான கூட்டம் இன்று (அக்டோபர் 11) ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கூட்டத்தில், மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய சுகாதாரக் குழு எடுத்துள்ள அதன் பரிந்துரைகளை அமைச்சர்கள் சபைக்கு சமர்ப்பிக்கும்.

பின்னர், அதன் அடுத்த அமர்வில் அதாவது திங்கட்கிழமை அல்லது வியாழக்கிழமை அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து பொருத்தமான சுகாதார முடிவுகள் எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குவைத்தில் பகுதிநேர ஊரடங்கு உத்தரவுக்கு திரும்புவதற்கான பரிந்துரை குறித்து சுகாதார அமைச்சர் டாக்டர் பசில் அல்-சபா நேற்று பரவிய வதந்திகளை திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

இதையும் படிங்க : குவைத்தில் தற்போது 95 சதவீதம் குடிமக்கள் அரசு வேளைகளில் உள்ளனர்..!!

ஆனால், ஊரடங்கை பொறுத்தவரை பல்வேறு குறிகாட்டிகள் மற்றும் அறிக்கைகளின் அடிப்படையில் பொருத்தமான முடிவு எடுக்கப்படும் என்றும் வட்டாரங்கள் சுட்டிக்காட்டின.

தற்போது, ICUவில் மொத்தம் 655 மற்றும் 139 பேர் இறந்த நிலையில், குவைத் கடந்த சில நாட்களில் இறப்பு விகிதத்தில் 11% அதிகரிப்பு கண்டுள்ளது.

பருவகால காய்ச்சல் மற்றும் நிமோனியாவிற்கான தடுப்பூசி பிரச்சாரத்தை நடப்பு வாரத்தில் அல்லது அடுத்த வாரத்தில் சுகாதார அமைச்சகம் துரிதப்படுத்தியுள்ளது.

இந்த தடுப்பூசிகள் நோயெதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த வேலை செய்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : குவைத்தின் சபா அல்-அஹ்மத் பகுதியில் புதிதாக இரண்டு சுகாதார மையங்களை சுகாதார அமைச்சர் திறந்து வைத்தார்..!!

குவைத் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

👉Facebook

👉 Twitter