COVID-19 காரணமாக வெளிநாட்டில் இவர்களின் ஒப்பந்தத்தை நிறுத்திய குவைத்!

Kuwait halts hiring of teachers
Kuwait halts hiring of teachers (Photo: shutterbuck)

COVID-19 தொற்றுநோயால் ஏற்பட்ட கட்டுப்பாடுகள் காரணமாக வெளிநாட்டிலிருந்து ஆசிரியர்களை இந்த நடப்பு ஆண்டுக்கு சேர்ப்பதை குவைத் நிறுத்தியுள்ளதாக செய்தி வட்டாரங்களை கூறியுள்ளன.

கொரோனா வைரஸ் நெருக்கடி சூழல் முடியும் வரை உள்ளூர் ஆசிரியர்களை வைத்து நடவடிக்கைகளை தொடர கல்வி அமைச்சகம் முடிவு செய்துள்ளது என்று Al Jarida செய்தித்தாள் குறிப்பிட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

குவைத் விமான நிலையம் மூடல்: 600 விமான சேவைகள் ரத்து – பயணிகள் பாதிப்பு!

தற்போதைய பள்ளி ஆண்டுக்கு வெளிநாட்டிலிருந்து ஆசிரியர்களை ஒப்பந்தம் செய்ய எந்த குழுவும் அமைக்கப்படவில்லை என்று அந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

முன்னதாக, குவைத் உள்ளூர் ஆசிரியர்களின் பற்றாக்குறை உள்ள சில பாடங்களை கற்பிப்பதற்காக எகிப்து, துனிசியா (Tunisia), ஜோர்டான் மற்றும் லெபனான் போன்ற பிற நாடுகளிலிருந்து பள்ளி ஆசிரியர்களை ஒப்பந்தம் செய்தது குறிப்பிடத்தக்கது.

இருப்பினும், உலகளாவிய கொரோனா வைரஸ் தொற்று மற்றும் அதனால் ஏற்பட்டுள்ள பயணக் கட்டுப்பாடுகள் ஆசிரியர் தொடர்பான ஒப்பந்தக் குழுக்களை அந்த நாடுகளுக்கு அனுப்புவதற்கு இடையூறாக உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

COVID-19 தடுப்பூசி மருந்தின் முதல் தொகுதி குவைத்திற்கு எப்போது வந்தடையும்? – அமைச்சர் விளக்கம்!

குவைத் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

👉Facebook

👉 Twitter