சமூக வலைத்தளங்களில் வெளியான செய்தி – அமைச்சகம் மறுப்பு!

(Photo: Kuwait Local)

குவைத்தின் அவ்காஃப் (Awqaf) மற்றும் இஸ்லாமிய விவகாரங்கள் அமைச்சகம் சமீபத்தில் ஒரு வெளிநாட்டவரை ஆலோசகராக நியமித்ததாக வெளியான செய்திகளை மறுத்துள்ளது.

வெளிநாட்டினரின் வேலைவாய்ப்பை மட்டுப்படுத்த நாடு முயல்வதாகவும், சமீபத்தில் வெளிநாட்டவர் ஒருவரை ஆலோசகராக நியமித்துள்ளதாகவும் பரவிய செய்தியை அது மறுத்துள்ளது.

குவைத்தில் கொரோனா காலகட்டத்தில் பணிப்பெண்களை துன்புறுத்துதல் அதிகரிப்பு..!!

அந்த செய்திகளை அமைச்சகம் ஆதாரமற்றது என்று நிராகரித்துள்ளதாக ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

“சமூக ஊடகங்களில் வெளியாகும் செய்திகளின் உண்மைத் தன்மையை அனைவரும் அறியவேண்டும்.”

மேலும், “வதந்திகளைத் தவிர்க்க வேண்டும், தவறான தகவல்களைப் பரப்புவதற்கு பங்களிக்கக்கூடாது” என்று குவைத் செய்தித்தாள் அல் ஜரிடா அமைச்சகம் தெரிவித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

குவைத்தின் 4.8 மில்லியன் மக்கள்தொகையில் கிட்டத்தட்ட 3.4 மில்லியன் வெளிநாட்டினர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

குவைத் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

👉Facebook

👉 Twitter